தத்துவம் : ஒரு விசயம் தவறாக நடக்க வாய்ப்பு இருக்குமேயானால் அது தவறாகவே நடக்கும்
வர வர ஊர்பக்கம் திருட்டு அதிகமாயிட்டே போகுது. 6 மாதம் முன்பு
எங்கள் வீட்டிலும் திருட்டு போனது,இரவில். வெளீயூர் போனபோது.
ஆனால் எங்கள் ஊரீல் பகலில் 2 திருட்டு வீட்டில் இருப்பவர்களை மிரட்டி தொடர்ந்து நடந்துள்ளது.
போலிஸ் வந்தது பார்த்தாங்க போயீட்டாங்க, அவளதான் வேற எந்த செய்தியும் இல்ல
இது எங்க ஊரில் மட்டும் அல்ல, தமிழகத்தில் பல இடங்களில் திருட்டுகள் அதிகமா நடக்குது.
போலிஸ் வெறும் கைரேகை சேகரிக்கும் வேலைதான் செய்றாங்களே தவிர.
கண்டுபுடிக்கற முயற்சி எடுத்த மாதிரி தெரியல
தங்கம் விக்கிற விலையில நடுத்தற மக்கள் அத வாங்கறது எவ்வளவு கஸ்டம்.ஆன அத பாதுகாக்கிறது அதவிட கஸ்டமா இருக்கு
.
நண்பர்கள் பலரும் உங்கள் ஊரிலும் இந்த செய்திகளை கேள்விபட்டிருப்பீர்கள்
நண்பர்கள் யாராவாது அடுத்து என்ன ஸ்டெப் எடுக்கிறது என்று சொன்னால் பலருக்கும் உபயோகமா இருக்கும்
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் வாக்களித்து குடியுருமையை வெற்றிபெற செய்தது போல் பதிவுலகில் வெற்றிபெற வாக்களியுங்கள்
Post Comment
You are
40 comments:
செம பாதுகாப்பு..
நான் கூட இப்படிதாங்க 10 டம்ளருக்கு 50 சங்கிலி போட்டு வைத்தேன்...
இரண்டும் திருட்டு போய்விட்டது...
//
# கவிதை வீதி # சௌந்தர் said...
செம பாதுகாப்பு..
வாங்க வாங்க
//# கவிதை வீதி # சௌந்தர் said...
நான் கூட இப்படிதாங்க 10 டம்ளருக்கு 50 சங்கிலி போட்டு வைத்தேன்...
இரண்டும் திருட்டு போய்விட்டது...
முதல்ல உங்கள தூக்கனும்
:D
//
சமுத்ரா said...
:D
வாங்க வாங்க
1. வீட்ட பூட்டிட்டு வீட்டுக்குள்ள ஒழிஞ்சு இருங்க. திருடன் வந்த உடனே ஒரே அடி.
2. வீட்ட திறந்து போட்டுட்டு, டி.வி, ரேடியோ எல்லாம் ஆன் பண்ணிட்டு போங்க, திருடன் வீட்ல யாரோ இருக்காங்கன்னு திருடாம போயிடுவான்.
3. நாங்க ஊருக்கு போறோம்னு பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டு போங்க.ஆனா போலீஸ் வந்து திருடுனா ஒண்ணும் பண்ண முடியாது.
இதுக்கு மேல ஐடியா வேணுமா பாஸ்?????
////
பலே பிரபு said...
1. வீட்ட பூட்டிட்டு வீட்டுக்குள்ள ஒழிஞ்சு இருங்க. திருடன் வந்த உடனே ஒரே அடி.
2. வீட்ட திறந்து போட்டுட்டு, டி.வி, ரேடியோ எல்லாம் ஆன் பண்ணிட்டு போங்க, திருடன் வீட்ல யாரோ இருக்காங்கன்னு திருடாம போயிடுவான்.
3. நாங்க ஊருக்கு போறோம்னு பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டு போங்க.ஆனா போலீஸ் வந்து திருடுனா ஒண்ணும் பண்ண முடியாது.
இதுக்கு மேல ஐடியா வேணுமா பாஸ்?????
செம ஐடியா பாஸ்
செருப்புக்கும் பூட்டு....அட இதுவும் நல்லாத்தான் இருக்கு....
இந்த படங்களை எல்லாம் எங்கிருந்து புடிச்சீங்க.. பதிவுக்கு ஏற்ற படங்கள் அசத்தல்..
Blogger Speed Master said...
//
செம ஐடியா பாஸ்//
நன்றி நன்றி நன்றி!!!
//
NKS.ஹாஜா மைதீன் said...
செருப்புக்கும் பூட்டு....அட இதுவும் நல்லாத்தான் இருக்கு....
இத விட பயங்கரம் எல்லாம் இருக்கு
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
இந்த படங்களை எல்லாம் எங்கிருந்து புடிச்சீங்க.. பதிவுக்கு ஏற்ற படங்கள் அசத்தல்..
ஹி ஹி எல்லாம் நம்ம Google Images தான்
//
பலே பிரபு said...
1. திருடன் எப்ப வருவான்னு தொரியாம எந்நேரமும் வீட்டிலேயே இருக்க முடியுமா
//
பலே பிரபு said...
மட்ட மலக்கா எப்படு கதவ திறந்து வச்சு போக முடியிமா?
நல்ல வேளை குடி நீர் பைப்புக்கு மட்டும் லாக் போட்டாங்க.. ஹா ஹா
அந்த செருப்பை விட பூட்டு விலை கூடியதாக இருக்கும் போல ...)
//சி.பி.செந்தில்குமார் said...
நல்ல வேளை குடி நீர் பைப்புக்கு மட்டும் லாக் போட்டாங்க.. ஹா ஹா
ஏன் நீங்க என்ன எதிர் பார்த்தீங்க
//கந்தசாமி. said...
அந்த செருப்பை விட பூட்டு விலை கூடியதாக இருக்கும் போல ...)
ஹி ஹி அதாங்க உலகம்
தங்கத்தை இரும்பு பெட்டில வைக்கறதில்லையா
ஆனாலும் செருப்புக்கு பூட்டு போடுறது எல்லாம் திரீ மச்
எல்லா ஊர்லியும் விவரமான ஆளுக இருக்கத்தான் செய்றாக.
//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆனாலும் செருப்புக்கு பூட்டு போடுறது எல்லாம் திரீ மச்
ஹி ஹி
//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
எல்லா ஊர்லியும் விவரமான ஆளுக இருக்கத்தான் செய்றாக.
உங்கள மாதிரியே
மனைவி வாய்க்கு போடும் பூட்டு எங்கே கிடைக்கும் மாஸ்டர்!
//! சிவகுமார் ! said...
மனைவி வாய்க்கு போடும் பூட்டு எங்கே கிடைக்கும் மாஸ்டர்!
உங்க வீட்டுக்காரம்மா போன் நம்பர் கொடுங்க நானே கடை அட்ரஸ் தற்றேன்
திருடர்கள் உள்ளே அனுமதி இல்லைன்னு வீட்டு வாசல்ல போர்டு வைங்க. ஆனா திருடனுக்கு எழுத படிக்க தெரியலைன்னா கஷ்டம்தான்
பேசாம உங்க வீட்ல உள்ள பொருள்களை நீங்களே திருடிருங்க. திருடனுக்கு ஒண்ணுமே இருக்காது
//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
திருடர்கள் உள்ளே அனுமதி இல்லைன்னு வீட்டு வாசல்ல போர்டு வைங்க. ஆனா திருடனுக்கு எழுத படிக்க தெரியலைன்னா கஷ்டம்தான்
இருட்டுல கண்ணும் தெரியாது கரெக்டா
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பேசாம உங்க வீட்ல உள்ள பொருள்களை நீங்களே திருடிருங்க. திருடனுக்கு ஒண்ணுமே இருக்காது
சொந்த அனுபவமோ
ஹி ஹி
வீட்ல இருக்குற பொருட்களெல்லாம் யார் யார்கிட்ட எவ்வளவு கடன் வாங்கி கஷ்டப்பட்டு வாங்கினதுனு வெளில ஒரு போர்டு போட்ருங்க..
திருட வர்றவன் அத படிச்சிட்டு இறக்கப்பட்டு விட்ருவான்.
//இந்திரா said...
வீட்ல இருக்குற பொருட்களெல்லாம் யார் யார்கிட்ட எவ்வளவு கடன் வாங்கி கஷ்டப்பட்டு வாங்கினதுனு வெளில ஒரு போர்டு போட்ருங்க..
திருட வர்றவன் அத படிச்சிட்டு இறக்கப்பட்டு விட்ருவான்.
நல்ல ஐடியா மேடம்
@//இந்திரா said...
வீட்ல இருக்குற பொருட்களெல்லாம் யார் யார்கிட்ட எவ்வளவு கடன் வாங்கி கஷ்டப்பட்டு வாங்கினதுனு வெளில ஒரு போர்டு போட்ருங்க..
திருட வர்றவன் அத படிச்சிட்டு இறக்கப்பட்டு விட்ருவான்.//
வீட்டில் எவ்வளவு பொருட்கள இருக்கிறது என்று விளமரப்ப்டுத்துவது போல் இருக்கிறது,
:-)
//
ஜீ... said...
:-)
வாங்க ஜீ
// FOOD said...
பத்திரம் பத்திரம் செம பாதுகாப்பு உத்திகள்.
நன்றீங்கோ
முதல் படத்தில் இருக்கும் செருப்பைவிட பூட்டு விலை அதிகமா இருக்கும்போல...
//உங்க வீட்டுக்காரம்மா போன் நம்பர் கொடுங்க நானே கடை அட்ரஸ் தற்றேன்//
இன்னும் கல்யாணம் ஆகல சாமி. சும்மா கேட்டேன்.
\\போலிஸ் வந்தது பார்த்தாங்க போயீட்டாங்க, அவளதான் வேற எந்த செய்தியும் இல்ல.\\ இந்த மாதிரி விஷயங்களில் பொது மக்கள் விழிப்புணர்வோடும், பொறுப்போடும் நடந்துகொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பை நல்க வேண்டும். காவல்துறையையே எல்லாவற்றுக்கும் சார்ந்திருக்கக் கூடாது. உங்கள் இடத்தைச் சுற்றி நடக்கும் எல்லாவிதமான திருட்டுக்கள் பற்றியும் காணாமல் போன பொருட்கள் பற்றிய முழு விவரங்களோடு [என்னென்ன திருட்டு போனது, அவற்றின் மதிப்பு எவ்வளவு போன்றவை] உடனடியாக காவல் துறையிடம் புகார் தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்கள் அவர்களுக்கு மிகவும் முக்கியம். சில சமயம் திருட்டு பற்றி சில புகாரே தெரிவிப்பதில்லை. இது காவல் துறைக்கு சிக்கலை ஏற்ப்படுத்துகிறது. எப்படி என்று நீங்கள் கேட்பது புரிகிறது. திருடர்களைப் பிடித்தவுடன், அவன் பத்து வீடுகளில் நூறு சவரன் நகைகளைத் திருடியிருக்கிறான் என்றால், ஐந்து வீடுகளில் நாற்ப்பது சவரந்தான் திருடினேன் என்று அதற்க்கு மட்டும் மாமூல் கொடுத்து விட்டுப் போய் விடுகிறார்கள், மிச்ச மாமூல் அவர்களுக்கு வருவாய் இழப்பாகிப் போய் விடுகிறது. காவல் துறையால் சரிவர தங்களது கடமையைச் செய்ய முடிவதில்லை. எனவே பொது மக்கள் மேலும் பொறுப்போடு நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
முந்தைய பின்னூட்டம் சும்மா தமாசுக்கு எழுதியது. இப்போ சில உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கு. நாம் எதற்க்கெடுத்தாலும் காவல் துறையையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களைப் பற்றி யாருமே சிந்திப்பதே இல்லை. நாம் நம்முடைய பொருள் காணாமல் போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் அவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். திருட்டு போன பொருளை மீட்டு அதன் சொந்தக் காரகளிடம் ஒப்படைப்பதில் அவர்களுக்குப் பல தடைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் போலீஸ் காரனின் தொப்பையைப் பாருங்கள். [அது இல்லைன்னா அவன் போலீஸ் காரனாகவே இருக்க முடியாது]. அதை வச்சுகிட்டு, அவன் ஓடி திருடனைப் பிடிக்க முடியுமா? அப்படி எதிர் பார்ப்பது உங்களுக்கே நியாயமா? அடுத்து ஒரு SI என்றால் அவர் பணியில் சேர ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுவும், குறிப்பிட்ட நகரங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகமாக நடக்கும் ஏரியாக்களில் வரும்படி அதிகமாகையால் அங்கு பணிமாற்றம் ஆகி வர வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் தள்ள வேண்டும். இப்படியெல்லாம் செலவு செய்து விட்டு, அங்கு கிடைக்கும் பத்தாயிரம் இருபதாயிரம் சம்பளத்தை வாங்கி விட்டு, கடைசியில் கிடைக்கும் ஆயிரம் ஐநூறு பென்ஷனோடு சாவதற்கு அவன் என்ன கேனச் சிருக்கனா? எந்த வியாபாரமுமே ஒன்று போட்டால் பத்து எடுப்பதுதானே, இவன் நேர்மையாக இருந்தால் எடுக்க முடியுமா? இவர்கள் அடிப்பது மேலதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை பங்கு போகிறது. மாதத்திற்கு இவ்வளவு Target நீ meet பண்ண வேண்டும் என்று உத்தரவிடப்படும். அப்புறமென்ன? நம் பொருள் போனது போனதுதான். திரும்பக் கேட்டால் நம் மீதோ, நம் உறவினர்கள் மீதோ பொய்க் கேசு போடப்படும். காசு வாங்கி ஓட்டுப் போட்ட நாம் இதை அனுபவித்துதான் ஆக வேண்டும். கேள்வி கேட்க எந்தத் தகுதியும் இல்லை.
காவல் துறையினரிடம் உள்ள குறைகளை மட்டுமே சொல்லுவதால், அவர்களிடம் திறமைகள், நல்ல குணங்கள் இல்லை என்று அர்த்தமில்லை. உதாரணத்திற்கு, கள்ளக் கடத்தல் நடக்கிறதென்றால், எந்த வண்டியில் எந்த சாலையில் எத்தனை மணிக்கு சட்டத்திற்குப் புறம்பாக என்ன கொண்டு செல்கிறார்கள் என்ற தகவலை குறைந்த பட்சம் ஆறு மணி நேரத்திற்கு முன்னரே தெரிவித்து விட்டால் கச்சிதாமாக அங்கே ஆஜராகி அவர்களை கிடுக்கிப் பிடி போட்டு மடக்கி விடுவார்கள். [ஆனால் ஒரு கண்டிஷன்: அவர்கள் மாமூல் கொடுக்காமல் கடத்துபவர்களாக இருக்க வேண்டும்]. அடுத்து, குற்றம் புரிந்து விட்டு காவல் நிலையத்தில் ஆஜாராகும் குற்றவாளிகளை கைது செய்வதில் வல்லவர்கள். தகராறு செய்து விட்டு காவல் நிலையத்துக்கு செல்பவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து பண்ணி பணத்தை வாங்கிக் கொண்டு சமாதானம் பண்ணி திருப்பி அனுப்புவதில் வல்லவர்கள். வீட்டில் உள்ளவர்கள் சம்மதம் பெறாமலேயே ஓடிப் போய் திருட்டுக் கல்யாணம் செய்து கொள்பவர்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் நிஜமான மாமாக்கள், இப்படி எத்தனையோ அரும் பணிகளை நாட்டுக்கு சேவை செய்து வருகிறார்கள் என்பதை நாமும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
Post a Comment