என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Monday, April 18, 2011

கலைஞர் கருணாநிதி பற்றி சிறு குறிப்புகள்

டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார் இப்போது மு.க! http://speedsays.blogspot.com/









தமிழ்நாட்டின் நிரந்தரத் தலைப்புச் செய்தி... கலைஞர் கருணாநிதி! ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் எதிரணியில் தொடர்ந்தாலும் புகழ்க் கடலில் மூழ்கி,விமர்சன முத்தெடுத்து வெளியே வருபவர். பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் தமிழ்த் தேனி.


ஆண்டவரே’ என்றுதான் எம்.ஜி.ஆர். இவரை அழைப்பார். பிற்காலத்தில் `மூக்கா’ என்றும் அழைத்திருக்கிறார். `மூனாகானா’ என்று அழைப்பது சிவாஜியின் ஸ்டைல். இன்று கருணாநிதியின் மனைவி, மகன்கள், பேரன் பேத்திகள் உட்பட அனைவருமே `தலைவர்’என்றுதான் சொல்கிறார்கள்!.

தினமும் டைரி எழுதும் பழக்கம்கொண்டவர் அல்ல கருணாநிதி. ஆனாலும், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும். 
http://speedsays.blogspot.com/`என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி’ என்பார்!.



அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது! .


ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்தால், சைவமே பெரும்பாலும் சாப்பிடுகிறார்.நித்தமும் ஏதாவது ஒருவகைக் கீரை இருக்க வேண்டும். 


தி.மு.க. தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் 11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அண்ணா அணிவித்த மோதிரத்தைக் கழற்றியதே இல்லை.தங்க சங்கிலிகளை எப்போதுமே அணிந்ததில்லை!.

சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி. திருவாரூர் போர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார். இப்போது கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!.


ஏதாவது ஒன்றைப் படித்தால், அதை அப்படியே ட்விஸ்ட் செய்வதில் தனித்திறமை உண்டு. `வீரன் ஒருமுறைதான் சாவான்... கோழை பலமுறை சாவான்’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி, `வீரன் சாவதே இல்லை....கோழை வாழ்வதே இல்லை’ என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்!.



ஆரம்ப காலத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் `உடன்பிறப்பே’ என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். `கடிதங்கள் எழுதுவதால்தான் என் மனவருத்தங்கள் குறைகின்றன’ என்பர்!.


பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி. `ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று ஒரு முறை கேட்கப்பட்டது. 
http://speedsays.blogspot.com/`அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று திருப்பி அடித்தார்!.

கருணாநிதி 40-க்கும் மேலான படங்களுக்கு கதை-வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம்,`மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!.

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’என்றுதான் என் கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்!.http://speedsays.blogspot.com/

பூஜை அறை மாதிரியான மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன.முக்கியமான நாட்களில், அங்கு வணங்கி விட்டுத்தான் வெளியில் புறப்படுவார்!.

சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள்,திரைக்கதை,வசனங்கள்,பாடல்கள் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.`ஆளும் திறமை இட்து மூளை... காவியமும் கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்’ என்றார் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி!.

’தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்’ கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது `வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- கருணாநிதி எழுதிய இம் மூன்றும் தமிழகத்தில் அதிக முறை சொல்லப்பட்ட வாக்கியங்கள்!.http://speedsays.blogspot.com/

12 முறை எம்.எல்.ஏ. 5 முறை முதலமைச்சர், 10முறை தி.மு.க. தலைவர் என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்!.http://speedsays.blogspot.com/

புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தும்,அதைச் சரிப்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு, நள்ளிரவு 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சம்பவம் அவரது அதிகப்படியான் அக்கறையை உலகத்துக்குச் சொன்னது!.

படுக்கையில் உட்கார்ந்து பரீட்சை அட்டை வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம்.உயரத்துக்காக இரண்டு தலையணைகளை அடுக்கிவைத்துக் கொள்வார். இன்றுவரை மை பேனாவைத்தான் பயன்படுத்துவார்!.

கோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம்,முரசொலி ஆகிய ஐந்து இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் மொத்தமும் கருணாநிதிக்காகத் தனியாகக் காத்திருக்கும்!.

கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கிய படி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்குகிறார்!.

கருணாநிதிக்குப் பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேசையில் வைத்திருப்பது திருக்குறள்!.

தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை!
http://speedsays.blogspot.com/.









டிஸ்கி: மெயிலில் வந்தது தவறான செய்திகள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும்


எனக்கு பிடித்தது:http://speedsays.blogspot.com/

50 வயதிலேயே சிலர் VRS வாங்கும்போது 80லும் இருக்கும் வலிமை

எந்த விசயத்தையும் இலகுவாக சாதிப்பது

நாலுவரி சொன்னாலும் நச்சுனு சொல்வது

எவரையும் அனுசரித்து அருகில் வைத்துக்கொள்ளும் திறன்

ஞாபக சக்தி

அரசியலில் மட்டும் அல்லாமல் பல துறைகளில் சாதனை






உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

49 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

வடை..

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

ஹி ஹி ஹி கலைஞர் வாழ்க

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

கலைஞர் பற்றி இவ்வளவு விஷயங்கள் தொகுத்து அசத்தியிருக்கிங்க பாஸ்...

சில விஷயங்கள் தற்போதுதான் கேள்விப்படுகிறேன்...

Speed Master said... Add Reply

//


# கவிதை வீதி # சௌந்தர் said...
வடை..


சுட சுட

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said...
ஹி ஹி ஹி கலைஞர் வாழ்க


சிபி வாழ்க

Speed Master said... Add Reply

// கவிதை வீதி # சௌந்தர் said...
கலைஞர் பற்றி இவ்வளவு விஷயங்கள் தொகுத்து அசத்தியிருக்கிங்க பாஸ்...

சில விஷயங்கள் தற்போதுதான் கேள்விப்படுகிறேன்..

நன்றி

சமுத்ரா said... Add Reply

ok ;)

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

அடுத்து யாரு வைகோவா?

Speed Master said... Add Reply

//சமுத்ரா said...
ok ;)

thanks

Speed Master said... Add Reply

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடுத்து யாரு வைகோவா?


கேப்டன் அட்டேன்சன்

Unknown said... Add Reply

மாப்ள அப்படியே இன்னொன்னையும் சேர்த்துக்க....

"குற்றவாளிகள் பிறப்பதில்லை இந்த சமுதாயமே அவனை உருவாக்குகிறது"

Anonymous said... Add Reply

கலைஞர் ஜெயிச்சி வந்தா தகவல்துறை அமைச்சர் பதவி உங்களுக்குதான்..

Speed Master said... Add Reply

//
விக்கி உலகம் said...
மாப்ள அப்படியே இன்னொன்னையும் சேர்த்துக்க....

"குற்றவாளிகள் பிறப்பதில்லை இந்த சமுதாயமே அவனை உருவாக்குகிறது"


நன்றி

Speed Master said... Add Reply

//! சிவகுமார் ! said...
கலைஞர் ஜெயிச்சி வந்தா தகவல்துறை அமைச்சர் பதவி உங்களுக்குதான்..

அப்ப நேத்திக்கு அம்மா பத்தி பதிவுபோட்டேன

Unknown said... Add Reply

கருணாநிதி பற்றி நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சது.. நன்றி..

சக்தி கல்வி மையம் said... Add Reply

அப்படியா?

சக்தி கல்வி மையம் said... Add Reply

கலைஞர் பற்றி சில விஷயங்கள் தற்போதுதான் கேள்விப்படுகிறேன்..
நன்றி ....

Speed Master said... Add Reply

// பதிவுலகில் பாபு said...
கருணாநிதி பற்றி நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சது.. நன்றி.

வருகைக்கு நன்றி

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அப்படியா?


அப்படிதான்

Speed Master said... Add Reply

// வேடந்தாங்கல் - கருன் *! said...
கலைஞர் பற்றி சில விஷயங்கள் தற்போதுதான் கேள்விப்படுகிறேன்..
நன்றி ....

மிக்க மகிழ்ச்சி

காங்கேயம் P.நந்தகுமார் said... Add Reply

ஏழைகளின் நண்பன் டாக்டர் கலைஞர் வாழ்க! நீங்க 6 வது முறையா ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள்

காங்கேயம் P.நந்தகுமார் said... Add Reply

கலைஞருக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை. இருப்பினும் அவர் மூளையே ஒரு டைரி. நன்று அவர்ஒரு அறிவுக்கடல் . அதில் நீந்த நமக்கொரு வாய்ப்பு

PPM said... Add Reply

ஒரு தலைவன் இறந்த பின் புகழ்வதை காட்டிலும் வாழும் போது புகழ்வது [...அதாவது நேருக்கு நேர் புகழ்வதை சொல்ல வரவில்லை ]உள்ளதை மிகை படுத்தாமல் கூறுவது குறைவு ..

உங்கள் கருத்துகள் பக்க சார்பு இல்லாமல் எழுத பட்டு உள்ளது ..
தொடரட்டும் உங்கள் பணி ..

வாழ்துக்கள் ..
ஹசன்கனி

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

ஹா ஹா ஹா ஹா என்ன திடீர்னு வண்டி தடம் மாறி ஓடுது... அருமையா சுவாரஸ்யமா இருக்குது...

சசிகுமார் said... Add Reply

பாராட்ட பட வேண்டிய தலைவர் இவர் இல்லை என்றால் தமிழ் உலகம் எப்பொழுதோ அழிந்து போய் இருக்கும்.

Speed Master said... Add Reply

//PPM said...


வருகைக்கு நன்றி ஹசன்கனி தொடர்ந்து வருகைதாருங்கள்

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
ஹா ஹா ஹா ஹா என்ன திடீர்னு வண்டி தடம் மாறி ஓடுது... அருமையா சுவாரஸ்யமா இருக்குது...

சும்மா ஒரு இன்பர்மேசன் டெவலப்

Speed Master said... Add Reply

//
சசிகுமார் said...
நன்றி சசி

Jayadev Das said... Add Reply

\\பூஜை அறை மாதிரியான மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன.முக்கியமான நாட்களில், அங்கு வணங்கி விட்டுத்தான் வெளியில் புறப்படுவார்!.\\ இது தான் பெரியார் சொல்லிக் கொடுத்த பகுத்தறிவோ!! கோவிலில் சுவாமி சிலையைக் கும்பிடுபவர்களை விமர்சிக்கும் இவர்கள் என்ன செய்கிறார்கள்? அந்தப் படங்களில் மட்டும் செத்து போனவர்கள் உட்கார்ந்து கொண்டு இவர் வைக்கும் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களா?

Jayadev Das said... Add Reply

\\ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்\\ சரியாகச் சொன்னால் "ஓய்வெடுக்காமல் பெண்டாட்டி பிள்ளைகளுக்காகவே உழைத்தவன்" என்று எழுத வேண்டும்.

Jayadev Das said... Add Reply

\\`வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- \\ இது பேச்சில், செயலில் "வீழ்வது தமிழனும், தமிழாகவும், வாழ்வது நாமாக இருக்க வேண்டும்".

ராஜ நடராஜன் said... Add Reply

//`கடிதங்கள் எழுதுவதால்தான் என் மனவருத்தங்கள் குறைகின்றன’ என்பர்!.//

இவர் கடிதங்கள் எழுதுவதால்தான் பலர் மனவருத்தங்கள் அதிகரிக்கின்றன என்பர்:)

ராஜ நடராஜன் said... Add Reply

//இன்று கருணாநிதியின் மனைவி, மகன்கள், பேரன் பேத்திகள் உட்பட அனைவருமே `தலைவர்’என்றுதான் சொல்கிறார்கள்!.//

உறவுகள் கடந்து இது என்ன உறவு?
பேரன் பேத்திகளாவது தாத்தா என அழைக்கலாமே!

Jayadev Das said... Add Reply

எனக்கு பிடிக்காதது:


50 வயதிலேயே சிலர் VRS வாங்கும்போது 80லும் நாட்டு மக்களை காவு கொடுத்து பெண்டாட்டி பிள்ளைகளுக்காகவே பாடுபடுவது.
தமிழர்களை பிச்சைக் காரர்களாக்கியது.
மணல் கொள்ளை.
சாராயக் கடை மூடாமல், மேலும் விரிவுபடுத்தி அதை மேலும் மோசமாக்கியது.
முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு எல்லா பிரச்சினைகளுக்கும் ஒன்னும் புடுங்காதது.
இலங்கைத் தமிழனனுக்காக முதலை கண்ணீர் வடித்தது.
மாநில வளர்ச்சித் திட்டங்களைக் கெடுத்து, இலவசங்களைக் கொடுத்து வருவது, அதுவும் போதாமல், சாராய விற்பனையையே நம்பியே காலத்தை ஒட்டிக் கொண்டிருப்பது.
ஓட்டு வாங்க எல்லா தில்லு முல்லு வேலைகளையும் பண்ணுவது.
பிள்ளைகளுக்கு பதவி வாங்க டில்லி வரை வீர் சேரிலேயே போனாலும், மாநில பிரச்சினைகளுக்கு மகனை அனுப்பி விட்டு, ரம்பாவின் திருமண வரவேற்ப்புக்கு நேரில் போவது.
தினமும் பாராட்டு விழாக்களில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்கள் தன்னைப் பற்றி புளுகுவதைக் வெட்கமேயில்லாமல் கேட்டுக் கொண்டிருப்பது.

Hope said... Add Reply

Jeevan Das,சொல்லுவது அத்தனையும் உண்மை. ஒன்று விட்டு விட்டீர்களே. என்னதான் சட்டம் சொன்னாலும் இவர் மட்டும் பொண்டாட்டி கூத்தியளுடன் வாழலாம். என்ன கொடுமை சார்!!!

Unknown said... Add Reply

ம்ம்ம் சுவாரஸ்ஸமான தகவல்கள்தான், ஆனால் இதையும் யாராவது அரசியலாக்கமல் இருந்தால் சரி :-)))

malar said... Add Reply

சுவையான தகவல்கள் ...பதிவுகள் எல்லாமே சூப்பர்....

malar said... Add Reply

இன்னும் பல தலைவர்களை பற்றி எழுதலாம்...

செங்கோவி said... Add Reply

அவரது உழைப்புக்கு இணை இல்லை தான்.

Unknown said... Add Reply

எனக்கு பிடித்தது என்று நீங்கள் குறிப்பிட்ட அத்துணை விஷயங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது..

Speed Master said... Add Reply

// Jayadev Das s


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

Speed Master said... Add Reply

//ராஜ நடராஜன் said...


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

Speed Master said... Add Reply

//இரவு வானம் said...
ம்ம்ம் சுவாரஸ்ஸமான தகவல்கள்தான், ஆனால் இதையும் யாராவது அரசியலாக்கமல் இருந்தால் சரி :-)))


மேல பாருங்க ரத்த ஆறே ஓடுது

Speed Master said... Add Reply

//FOOD said...
சுவையான தகவல்கள். பகிர்விற்கு நன்றி.

நன்றி சார்

Speed Master said... Add Reply

// malar said...
சுவையான தகவல்கள் ...பதிவுகள் எல்லாமே சூப்பர்....


வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி

Speed Master said... Add Reply

// செங்கோவி said...
அவரது உழைப்புக்கு இணை இல்லை தான்.

ஆம்

Speed Master said... Add Reply

// பாரத்... பாரதி... said...
எனக்கு பிடித்தது என்று நீங்கள் குறிப்பிட்ட அத்துணை விஷயங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது..


மிக்க நன்றி பாரதி

Speed Master said... Add Reply

@onelanka

நான் யாருக்கும் ஜால்ரா அடிக்கவில்லை

ஒவ்வொரு அரசியல் தலைவரைப்பற்றி சிறியதாக குறிப்பு எழுதியுள்ளேன்

முந்தய மற்றும் பிந்தய பதிவுகளை பாருங்கள்

Unknown said... Add Reply

ஊழலென்னும் ஓர் வார்த்தை இவரை
சூழ்ந்து கொண்ட காரணத்தால்
தமிழ்த் தலைவன் என்றலைக்கும்
புகழ் தன்னை தவறவிட்டார்.