வெகு நாட்கள் கழித்து வேலை விசயமாக சென்னை சென்றிருந்தேன்
சென்னை இன்றைய தமிழர்களில் வாழ்வில் ஒரு முறையேனும் வந்து செல்ல ஆசைப்படும் நகரம் சிங்காரசென்னை
படங்களில் காட்டுவதைவிடவும் மிகவும் பரப்பாக இருக்கும் நகரம். 4 வருடங்கள் சென்னையில் வாழ்த்திருக்கிறேன்
கையேந்தி பவன் முதல் லீ மெரிடியன் வரை சாப்பிட்டு பார்த்தாச்சு
கேளம்பாக்கத்திலுந்து போருர் வரை நான் போகத இடங்கள் மிக்க்குறைவு
மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் கூட இவ்வள்வு சந்து பொந்துகளில் திரிந்திருக்க மாட்டார்கள்
சென்னையில் நான் அதிக தடவை சென்றது டைட்டில் பார்க் காரணம் அங்கு தான் வேலைப்பார்த்தேன்
அதற்கு அடுத்து நண்பர்கள் மற்றும் உடன் வேலைபார்த்தவர்களின் திருமண்ங்களுக்கு
உடன் வேலை பார்த்தவர்களில் பெரும்பாலனேரை அண்ணா, அக்கா என்று உறவு செல்லியே அழைத்துமட்டும் விடாமல் அதோ பாசத்தேடும் இருந்ததால் அணைவரின் வீட்டு விசேசங்களுக்கு கண்டிப்பாக எனக்கு அழைப்பு வந்துவிடும்,நானும் முடிந்தவரை சென்றுவிடுவேன்
நான் மிக்க்குறைந்த தடவை (2,3 முறை) போன இடங்கள் ஸாப்பிங் பிளாசக்கள்,பீச், தியேட்டர்கள் ஏனோ எனக்கு அன்றைய உழைக்கும் வேலையில் இவைகளில் மணம் நாடவில்லை
திரைப்படங்களைப்போல் சென்னையில் அப்படி ஒன்றும் கொடுர புத்திகாரர்கள், பொருக்கீகள், அடிப்பட்டால் காப்பாறதவர்கள் மிகமிக குறைவு
டாஸ்மார்க்கில் கீயூவில் நின்று சாரயம் வாங்கினார்கள்
(துரைப்பாக்கம் OMR ரோடு – இப்போ அங்கு கடை இல்லை)
முதன் முதலாக சென்னை சென்றபோது நான் பார்த்து வியந்தது
ஏனெனில் நான் அதற்கு முன் சாரயக்கடைகளில் அவ்வளவாக இப்படி கூட்டத்தை பார்த்ததில்லை
காலையிலும் மாலையிலும் கூட்டமாக பஸ்
அப்படி எங்குதான் போவார்களே என்று பலமுறை நினைத்ததுண்டு
கடைசியில் நானும் அதே போல் தொங்கி சென்று பல முறை விழிந்ததும் உண்டு
தெனவட்டாக திரியும் பெண்கள்
எங்கள் ஊரில் ஒரு பெண் சத்தமாக ரோட்டில் பேசி சென்றாளே எரிச்சலுடனும் பார்த்து பழக்கப்பட்ட நான் சனிக்கிழமை இரவுகளில்
பேஸன் டெக்னாலஜி பெண் செம போதையில் லிப்ட் கேட்ட போது பாரதியை மனதில் கருவிக்கொண்டேன்
( நீ கண்ட பெண்விடுதலை நடு ரோட்டில் அரைநிர்வாணம் வரை வந்துவிட்டது என)
தாயை அடிக்கடி திட்டும் கெட்ட வார்த்தை
(10 வயது சிறுவன் கூட வாய்ப்பாடு போல ஓ சொல்கிறான்)
எங்கள் ஊர்பகுதிகளில் பெரியவர்கள் யாரேனும் வீட்டுக்கு வந்தால் அவர் பெயர் சொல்லி --- மாமா வந்துள்ளார் எனக்கூட அழைத்ததில்லை
ஆனால் சென்னையில் பத்து வயது சிறுவன் பஸ்ஸில் தொங்கிக்கொண்டு கண்டக்டரிடம் ஓ--- போட்டு சண்டைபோட்ட போது உண்மையிலேயே அருவருப்பாக இருந்த்து
வீட்டோரத்தில் பெணகள் சூதாட்டம் & குடிப்பழக்கம்
யார் சொன்னது ஐடி பெண்கள் தான் குடிப்பார்கள் கும்மாளமிடுவார்கள்
யப்பா இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இருந்தவர்கள்
குவாட்டர் பாட்டிலைஇடுப்பில் செருகி சேலையைவாரி செருகியதைப்பார்த்த போது ஏண்டா பூமி பொங்காது என தோன்றியது
போலிஸ்காரர்களின் மாமுல் வேட்டை
காலை 5 மணிக்கு தாம்பரம் சிக்கனில் அசல்டாக பார்க்கலாம், என்னமே குடுத்து வைத்த பணத்தை கேட்பது போல மிரட்டி காசு வாங்கினார்கள்
ஆனால் இவர்களை எல்லாம் விட
சென்னையை கொஞ்சமாவது அழகாக்கும் மாமனிதர்கள்,
இவர்கள் இல்லையெனில் சிங்காரசென்னை என்ற பெயர்கூட அழிந்திருக்கும்
தன் பேத்திக்கு வாங்கிய திண்பண்டங்களை ரயிலில் ஒரு ஏழைக்குழத்தைக்கு தன் பேத்தியின் கையால் கொடுத்த முதியவரை பார்த்த போது இன்னும் சென்னையில் பலரிடம் மனதில் ஈரம், உதவும் குணம் உள்ளது என தெரிந்து கொண்டேன் பாவம் அவர்களுக்கு அதை வெளிகொணர காலம் தான் பத்தவில்லை
வாழ்க்கை என்ற சொல்லுக்கு அர்தங்கள் கிடையாது
வாழ்க்கை என்பது அர்தங்களை உருவாக்குவதற்கான சொல்
வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்
BPO - Non Voice – Insurance, Healthcare, MIS – 4years
IT System Support - 1.5 years
Textile Manufacturer – import & Export –
Media – TV Shows Creative, Comparing and Directing, Black Magic
Money Exchange, Hotel Administration
ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளது
தற்பொழுது எந்த வேலையும் இல்லை அலுவலகம் சார்ந்த எந்த வேலையும், எந்த நாட்டிலும் செய்ய தயார்
எதேனும் வேலை இருந்தால் நண்பர்கள் தயவுசெய்து தெரிவிக்கவும்
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்
Post Comment
You are
57 comments:
அடேயப்பா சூப்பர் பம்பர் ஹிட் பதிவு
குடிக்கும் பெண்களை பார்த்து அதிர்ச்சிதான்..அருமையான தொகுப்பு
மாமூல் மாமா
சென்னை வழ்க்கை தொடர் பதிவாக்குங்கள்
சென்னையில் நான் அதிக தடவை சென்றது டைட்டில் பார்க் காரணம் அங்கு தான் வேலைப்பார்த்தேன்//
அது பற்றிய சிறப்பு பதிவை எதிர்பார்க்கிறேன்
//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
அடேயப்பா சூப்பர் பம்பர் ஹிட் பதிவு
வாங்க வாங்க
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
குடிக்கும் பெண்களை பார்த்து அதிர்ச்சிதான்..அருமையான
அதிர்ச்சி மட்டுமா?
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
மாமூல் மாமா
ஆமா ஆமா
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
சென்னை வழ்க்கை தொடர் பதிவாக்குங்கள்
நிச்சயம் முயற்சிக்கிறேன்
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
சென்னையில் நான் அதிக தடவை சென்றது டைட்டில் பார்க் காரணம் அங்கு தான் வேலைப்பார்த்தேன்//
அது பற்றிய சிறப்பு பதிவை எதிர்பார்க்கிறேன்
அது சொர்க்கத்தில் நரகம்
நரகத்தில் சொர்க்கம்
சென்னை அப்படியே ஒரு ரவுண்டு அடிச்ச மாதிரி இருக்கு..
இதுதாங்க சென்னை..
அதை மாத்த யாராலும் முடியாது..
வாழ்க சிங்கார சென்னை..
//# கவிதை வீதி # சௌந்தர் said...
சென்னை அப்படியே ஒரு ரவுண்டு அடிச்ச மாதிரி இருக்கு..
ஒரு ரவுண்ட் தானா?
// # கவிதை வீதி # சௌந்தர் said...
இதுதாங்க சென்னை..
அதை மாத்த யாராலும் முடியாது..
வாழ்க சிங்கார சென்னை..
தமிழ் வாழ்க
சென்னையப்பற்றி ஒரே பதிவில் நிறைய விசயங்க சொல்லி இருக்கறீங்க..
சூப்பரா சொல்லி இருக்கீங்க
இதைத்தானா பார்க்க ஆசைப்பட்டாய் பாரதி!
நல்லா சொல்லியிருக்கீங்க.. நிறைவாய் தெரிகிறது.
சில சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது..
//
சங்கவி said...
சென்னையப்பற்றி ஒரே பதிவில் நிறைய விசயங்க சொல்லி இருக்கறீங்க..
விரிவாக விரைவில் எழுதிகிறேன்
//விக்கி உலகம் said...
சூப்பரா சொல்லி இருக்கீங்க
இதைத்தானா பார்க்க ஆசைப்பட்டாய் பாரதி!
எந்த பாரதி?
//
பாரத்... பாரதி... said...
நல்லா சொல்லியிருக்கீங்க.. நிறைவாய் தெரிகிறது.
சில சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது
நன்றி பாரதி
கலக்கலான புகைப்படங்களுடன் சென்னையின் இன்னொரு முகம்.
// ரஹீம் கஸாலி said...
கலக்கலான புகைப்படங்களுடன் சென்னையின் இன்னொரு முகம்.
நன்றி
சூப்பர் பாஸ்! அருமையான பதிவு! வரவேணும் பாஸ்! :-)
யாராக இருந்தாலும் முதல் சந்திப்பிலே ஒருமையில் அழைப்பது... மிக மட்டமான பழக்கம் அங்கே..
//
ஜீ... said...
சூப்பர் பாஸ்! அருமையான பதிவு! வரவேணும் பாஸ்! :-)
நன்றி ஜீ
//வைகை said...
யாராக இருந்தாலும் முதல் சந்திப்பிலே ஒருமையில் அழைப்பது... மிக மட்டமான பழக்கம் அங்கே..
உண்மைதான்
வாழ்க சிங்கார சென்னை..
நம்ம பக்கம் ஆளைக் கானோம்..
நீங்கள் நினைப்பது போல் சென்னை வாசிகளுக்கு ஓ--- என்பது கேட்ட வார்த்தை அல்ல . அமெரிக்கர்களுக்கு f**k என்ற வார்த்தை போல் . நண்பர்களிடமும் அதிகம் நெருக்கமானவர்களிடமும் சகஜமாக இந்த வார்த்தையை பயன் படுத்துவார்கள் இன்னும் சொல்லபோனால் எனக்கு தெரிந்து என் நண்பன் வீட்டில் அப்பா மகன் இருவரும் சகஜமாக இப்படிதான் பேசுவார்கள் ......
//அஞ்சா சிங்கம் said...

எப்படி இருந்தாலும் அதன் அர்த்தம் காதுகூசும் வண்னம் உள்ளதா இல்லையா?
//
வேடந்தாங்கல் - கருன் said...
வாழ்க சிங்கார சென்னை..
நம்ம பக்கம் ஆளைக் கானோம்..
ஏற்கன்வே வந்துட்டேன்
Good people but create bad politicians. samy
@Samy
thanks for sharing
தற்போதைய சென்னையைபற்றி சிறப்பாக சொல்லியிருக்கீங்க நண்பரே சூப்பர் வாழ்த்துக்க்கள்...
//
மாணவன் said...
தற்போதைய சென்னையைபற்றி சிறப்பாக சொல்லியிருக்கீங்க நண்பரே சூப்பர் வாழ்த்துக்க்கள்...
நன்றி நண்பரே
சென்னை பற்றி போட்டு தாக்கீட்டீங்க..
சென்னை......... நல்லாத்தான் இருக்கு....! சென்னை ஆட்டோ ட்ரைவர்கள், பஸ் கண்டக்டர்கள் இவங்க கிட்ட மாட்டிக்காதவங்க யாருமே இருக்கமாட்டாங்க, அதை பத்தியும் சொல்லி இருக்கலாம்.... (பார்ட் -2?)
//எப்படி இருந்தாலும் அதன் அர்த்தம் காதுகூசும் வண்னம் உள்ளதா இல்லையா?//
Yes..Yes..
//சி.பி.செந்தில்குமார் said...
சென்னை பற்றி போட்டு தாக்கீட்டீங்க..
போட்டு தாக்கவில்லை
தற்போதைய நிலைதான்
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சென்னை......... நல்லாத்தான் இருக்கு....! சென்னை ஆட்டோ ட்ரைவர்கள், பஸ் கண்டக்டர்கள் இவங்க கிட்ட மாட்டிக்காதவங்க யாருமே இருக்கமாட்டாங்க, அதை பத்தியும் சொல்லி இருக்கலாம்.... (பார்ட் -2?)
நிச்சயமாக முயற்சிக்கிறேன்
//
பாரத்... பாரதி... said...
//எப்படி இருந்தாலும் அதன் அர்த்தம் காதுகூசும் வண்னம் உள்ளதா இல்லையா?//
Yes..Yes..
இந்த வார்த்தை எதோ இப்படிக்கு போல ஒவ்வொருவாக்கியத்திற்கும் உள்ளது
அந்த போலீசுக்கு ஆப்பு வச்சிட்டீங்களே மாப்பூ.....
//வீட்டோரத்தில் பெணகள் சூதாட்டம் & குடிப்பழக்கம்//
இதெல்லாம் இப்போ சகஜமப்பா...
//MANO நாஞ்சில் மனோ said...
அந்த போலீசுக்கு ஆப்பு வச்சிட்டீங்களே மாப்பூ.....
எதோ நம்மாள முடிந்த தொண்டு
//
MANO நாஞ்சில் மனோ said...
//வீட்டோரத்தில் பெணகள் சூதாட்டம் & குடிப்பழக்கம்//
இதெல்லாம் இப்போ சகஜமப்பா...
சாக்கடைகள் சகஜமாகிவிட்டன
நான் கண்ட சென்னை எல்லாம் அவன் செயல் ....
மனோ அண்ணன் சொன்னாரு நாங்களும் ட்ரை செய்துகிட்டு இருக்கோம் கண்டிப்பா நம்பிக்கையோடு இருங்க எங்கிருந்து வேண்டுமானாலும் அழைப்புகள் வரலாம் தங்களுக்கு ......
//தினேஷ்குமார் said...
நான் கண்ட சென்னை எல்லாம் அவன் செயல் ....
மனோ அண்ணன் சொன்னாரு நாங்களும் ட்ரை செய்துகிட்டு இருக்கோம் கண்டிப்பா நம்பிக்கையோடு இருங்க எங்கிருந்து வேண்டுமானாலும் அழைப்புகள் வரலாம் தங்களுக்கு ....
மிக்க நன்றி சார் காத்துக்கொண்டும் முயற்சித்துக்கொண்டும் இருக்கிறேன்
சென்னையிலேயே இருப்பவர்களுக்கு பழகிப் போயிருந்தாலும் வெளியூர்க்காரர்களுக்கு அதிர்ச்சியான சென்னையின் பக்கங்களைக் காட்டியிருக்கிறீர்கள்!
//middleclassmadhavi said...
சென்னையிலேயே இருப்பவர்களுக்கு பழகிப் போயிருந்தாலும் வெளியூர்க்காரர்களுக்கு அதிர்ச்சியான சென்னையின் பக்கங்களைக் காட்டியிருக்கிறீர்கள்!
நன்றி மாதவி தொடர்ந்து வருகைதாருங்கள்
//FOOD said...
இப்படியும் ஒரு முகம், சென்னைக்கு.
பல முகங்கள் உண்டு சென்னைக்கு ஒவ்வென்றாக பார்ப்போம்
உங்களுக்கு சென்னையிலேயே வேலை கிடைக்கட்டும். # வேண்டுதல் # வரமா? சாபமா?
//
பாரத்... பாரதி... said...
உங்களுக்கு சென்னையிலேயே வேலை கிடைக்கட்டும். # வேண்டுதல் # வரமா? சாபமா?
வேலை எங்கு கிடைத்தாலும் வரமே
நண்பரே, வந்து விட்டேன். என்ன, வேலை வேண்டுமா? டெக்ஸ்டைல் துறையில் அனுபவம் இருக்கிறது பொல் தெர்கிறது.
பதிவர் ஜோதிஜியைத் தொடர்பு கொள்ளவும்.
//
DrPKandaswamyPhD said...
நண்பரே, வந்து விட்டேன். என்ன, வேலை வேண்டுமா? டெக்ஸ்டைல் துறையில் அனுபவம் இருக்கிறது பொல் தெர்கிறது.
பதிவர் ஜோதிஜியைத் தொடர்பு கொள்ளவும்.
நன்றி சார்
அவருடைய தொடர்பு எண் குடுங்களேன்
//பாட்டு ரசிகன் said...
நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்று உங்களுக்கு தெரியுமா...
தெரிந்து கொள்ள பாட்டு ரசிகன் அழைக்கிறேன்..
http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_25.html
ஒரே போஸ்டரை ஊர் புல்லா ஓட்டியிருப்பீங்க போல
நான் சென்னை வந்ததே இல்லை ஓ,ஓ, இதுதான் சிங்காரச்சென்னையா.
ஐயோ, வரனும்னு நினைச்சாலே என்னமோ பண்ணூதே.
//
Lakshmi said...
நான் சென்னை வந்ததே இல்லை ஓ,ஓ, இதுதான் சிங்காரச்சென்னையா.
ஐயோ, வரனும்னு நினைச்சாலே என்னமோ பண்ணூதே.
வாங்க வாங்க
மாமூல் வாங்கி மாமூல் வாங்கியே போலிஸ்காரர்கள் தங்களுக்கு மாமூலாக கிடைக்கும் மரியாதை கூட கிடைக்கப்பெறாமல் கெடுத்துக்கொண்டார்கள். >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
Post a Comment