என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Wednesday, December 15, 2010

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்

[Image: off.bmp]


அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்
(பின் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பள்ள!!!!!!!)


1. உங்கள் அலுவலகத்தில் யார் அடுத்து விடுபட போகிறார்கள் என துப்பறிந்து கண்டறியுங்கள்.


2. உங்க முதலாளிக்கு சும்மா ஒரு Blank Call குடுங்க.


3. உங்க yahoo ல இருந்து Gmail கு ஒரு மின்னஞ்சல் பண்ணுங்க. உடனே Gmail ஐ திறந்து பாருங்க. மின்னஞ்சல் வர எவ்வளோ நேரம் ஆகுதுன்னு கண்டுபிடிங்க.


4. மற்றவர்கள் பயன்படுத்தும் நாற்காலி, பிரிண்டர் இவைகளை இடமாற்றம் செய்து அவர்களுக்கு கோபம் உண்டாக்குங்கள்.


5. உங்கள் கைவிரல்களை எண்ணுங்கள், இன்னும் போர் அடிக்கிறது என்றால், கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்கள்.


6. மற்றவர்கள் வேலை செய்யும் போது அவர்கள் முகபாவனைகளை பாருங்கள். கண்டிப்பாக சிரிப்பு வரும். அதுபோல் உங்கள் முகபாவனைகளையும் அவ்வப்போது மாற்றுங்கள். அப்போது தான் நீங்கள் வேலை செய்வது போல் தோன்றும்.

7. இரண்டு மணி நேரம் சாப்பிட எடுத்துக்கொள்ளுங்கள். சமுதாய பிரச்சனைகளை அலசுங்கள்.

8. விசில் அடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
[Image: whistle.jpg]

9. போன வாரம் அல்லது போன மாத நாளிதழை திரும்ப படிங்க.

10. தேநீர் பருகிய கப்பை குறிபார்த்து குப்பை தொட்டியில் ஏறிய பயிற்சி எடுங்கள்.

11. உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் எத்தனை அப்ளிகேசன் திறக்க முடியும் என்று சோதித்து பாருங்கள்.

12. உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நாற்காலியில் எவ்வளவு தூரம் சாய முடியும் என்று சோதித்து பாருங்கள்




இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள். பிடித்து இருந்தால் ஓட்டு போட மறக்காதீர்கள்

Post Comment

You are

1 comments:

Nanjil Siva said... Add Reply

இத்துணை கஷ்டப்பட வேணாம் ... பக்கத்துக்கு சீட்டுல இருக்குற பொண்ண லவ் பண்ணுனாலே போதும் நேரம் சூப்பரா போகும்.