புன்னகை புரியுங்கள் நாளை இதை விட மோசமான நாளாக இருக்கலாம்
திரைப்படங்கள நாம் பொழுதுபோக்கிற்காகதான் பார்க்கின்றோம் என்றாலும் ஒரு சில படங்கள் நம்முள் தாக்கத்தை ஏற்படுத்தும்,
அந்த வரிசையில் நகைச்சுவை படமாக இருந்தாலும் படத்தின் இறுதியில் நம்முள் ஒரு ஏக்கத்தையும் கண்களில் சின்ன ஒரு ஈரத்தையும் உணரலாம்
சிறந்த படங்களுக்கு வசனமே, மொழியோ ஒரு தடையல்ல என்பதற்கு
சார்லி சாப்ளின் படங்கள் மிக சிறந்த உதாரணம்
தி கிட் பற்றி எழுதிய போது நண்பர்கள் இன்னும் சற்று விரிவாக எழுத சொல்லிருந்தீர்கள்.
நான் விரிவாக எழுதாதற்கு காரணம் இந்த மாதிரி படங்களுக்கல்லாம்
விரிவாக எழுத முடியாது, காரணம் ஒரு படத்தில் சிறந்த இடங்களைதான் நாம் இம்மாதிரி எழுதும் போது குறிப்பிடமுடியும், ஆனால் இவர் படங்களுக்கு அப்படி ஒரு சில இடங்கள் தான் சிறந்தது என குறிப்படமுடியாது
மேலும் இந்த படத்தின் கதையை விவரித்து இப்பட்த்தின் சுவாரசியத்தை கொஞ்சம் கூட இழக்கக்கூடாது என்பதே என் எண்ணம்
கதை :
ஒரு ஏழை மனிதன் பூ விற்கும் ஒரு கண் தெரியாத ஒரு பெண் மேல் காதல் கொள்கிறான், அந்த பெண்னிற்குகாக உதவுவதும், அப்பெண்ணின் கண் ஆப்ரேசனுக்காக திருடி ஜெயிலிக்கு போவதும் என தன் வாழ்கையை அர்பணிக்கிறான்
சிலையுடன் செய்யும் சேட்டைகள் ஆகட்டும்
ஒரு சிலையை கடையில் ரசிப்பதும்
பூ விற்கும் பெண்ணிற்கு கண் தெரியவில்லை என்றவுடன் அவர் முகம் மாறும் விதமும்
தற்கொலை செய்ய போகிறவனை காப்பாற்றுவது
ரோட்டில் இருக்கும் சுருட்டை ஸ்டைலாக பிடிப்பது
பணத்திற்காக பாக்ஸிங் செய்ய போய் அங்க படும் இன்னல் என
எல்லா இட்த்திலும் காமெடி கலை கட்டியிருந்தாலும்
கடைசியில் அந்த பெண் அவர் கையை பிடித்து அடையாளம் கண்டுகொள்ளும் இடத்தில் கண்கள் ஈரமாகும்
இப்படத்திற்கு இசையும் இவர்தான், காமெடிகாட்சிகளுக்கும் காதல் காட்சிகளுக்கும் நம்மை அப்படியே உறையவைக்கும் இசை
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் இவரின் படங்களை பார்க்கும் போது முடிந்த வரை தனியாகவும், அவரிம் முக பாவங்களை கூர்ந்தும் கவனியுங்கள்
நடிப்பில் இவர் அருகில் மட்டும் அல்ல இவரின் நிழலை கூட யாரும் நெருங்க முடியாது
இந்த லிங்க் மூலமாக யூடொரண்ட் லிங்கை டவுண்லோட் செய்து பாருங்கள் ,கிளாரிட்டி நன்றாக உள்ளது
கீழே இந்த படத்திலிருந்து ஒரு சின்ன காட்சி
நண்பர்கள் இனி விமர்சனம் எழுதும் போது டவுண்லோட் லிங்கையும் பகிருங்கள்
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
Post Comment
You are
27 comments:
மௌனத்தில் உலகை சிரிக்க வைத்தவர்...
தான் அழுதும் உலகை சிரிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தவர் மிக அபூர்வரம்..
சாப்ளின் தனியாகவோ காதல் காட்சிகளிலோ... பிற எந்த காட்சிகளில் நடித்தாலும் அவரின் நடை அசைவு பாவனை போன்றவற்றை தொடர்ந்து கவனிப்போன்...
மிகவும் அற்புதமாக இருக்கும்..
//
# கவிதை வீதி # சௌந்தர் said...
மௌனத்தில் உலகை சிரிக்க வைத்தவர்...
உண்மை
//# கவிதை வீதி # சௌந்தர் said...
தான் அழுதும் உலகை சிரிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தவர் மிக அபூர்வரம்..
சாப்ளின் தனியாகவோ காதல் காட்சிகளிலோ... பிற எந்த காட்சிகளில் நடித்தாலும் அவரின் நடை அசைவு பாவனை போன்றவற்றை தொடர்ந்து கவனிப்போன்...
மிகவும் அற்புதமாக இருக்கும்..
சிறந்த நடிகர் அல்லவா
சார்லி சாப்ளின் வாழ்வோ அழுகை!
அந்த மாமனிதர் அளித்ததோ உலகிற்கு சிரிப்பு.!!
நல்லா எழுதி இருக்கே.. பகிர்தலுக்கு மிக்க நன்றி
//இராஜராஜேஸ்வரி said...
சார்லி சாப்ளின் வாழ்வோ அழுகை!
அந்த மாமனிதர் அளித்ததோ உலகிற்கு சிரிப்பு.!!
என்ன வாழ்க்கைடா இது
// ஜாக்கி சேகர் said...
நல்லா எழுதி இருக்கே.. பகிர்தலுக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி சார்
வருகைக்கு
link -kku mikka nandri
சாப்ளினின் பரம ரசிகைகளில் நானும் ஒருத்தி. அவருடைய திரைப்பட வாழ்க்கையாகட்டும், தனிப்பட்ட வாழ்க்கையாகட்டும்.. சாப்ளினுக்கு நிகர் சாப்ளின் தான்.
தாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள திரைப்படத்தை அதிகமுறை பார்த்துள்ளேன். உங்களுடைய கருத்திற்கு நானும் ஒத்துப்போகிறேன்.
சாப்ளினி்ன் முகபாவங்களுக்கு ஈடு வேறெதுவுமில்லை.
அந்த இறுதிக் காட்சியில் காதல் உணர்வைக் கண்களின் வழியே கொண்டு வரும் இவரின் நடிப்பு அற்புதம்.
மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திய உங்கள் பதிவின் பகிர்வுக்கு மிக்க நன்றி.
//# கவிதை வீதி # சௌந்தர் said...
மௌனத்தில் உலகை சிரிக்க வைத்தவர்...//
சரியான பொறுத்தமான விளக்கம் நண்பரே..
மாப்ள சாப்ளின் ஒரு சகாப்தம்..........சிவப்பு சிந்தனையாளன்....
பகிர்வுக்கு நன்றி!
//
ஷர்புதீன் said...
link -kku mikka nandri
welcome
//
இந்திரா said...
சாப்ளினின் பரம ரசிகைகளில் நானும் ஒருத்தி. அவருடைய திரைப்பட வாழ்க்கையாகட்டும், தனிப்பட்ட வாழ்க்கையாகட்டும்.. சாப்ளினுக்கு நிகர் சாப்ளின் தான்
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
// இந்திரா said...
//# கவிதை வீதி # சௌந்தர் said...
மௌனத்தில் உலகை சிரிக்க வைத்தவர்...//
சரியான பொறுத்தமான விளக்கம் நண்பரே..
உலகையே வென்றவர்
//விக்கி உலகம் said...
மாப்ள சாப்ளின் ஒரு சகாப்தம்..........சிவப்பு சிந்தனையாளன்....
பகிர்வுக்கு நன்றி!
நன்றி
அருமை நண்பா! இதுபற்றி எழுதணும்னு இருந்தேன்! :-)
//
ஜீ... said...
அருமை நண்பா! இதுபற்றி எழுதணும்னு இருந்தேன்! :-)
ஹி ஹி நல்லவேள நான் முந்திட்டேன்
சாப்ளின் ஒரு சரித்திரம்யா....!!!
//
MANO நாஞ்சில் மனோ said...
சாப்ளின் ஒரு சரித்திரம்யா....!!!
நன்றிங்கோ
பகிர்வுக்கு நன்றி..
//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பகிர்வுக்கு நன்றி..
வ்ருகைக்கு நன்றி
சாப்ளின் அனைவருக்கும் பிடித்த நடிகர், உங்கள் விமர்சனமும் அருமை, பாலோயர் ஆக கிளிக் பண்ணினால் வேலை செய்யவில்லை
//
இரவு வானம் said...
சாப்ளின் அனைவருக்கும் பிடித்த நடிகர், உங்கள் விமர்சனமும் அருமை, பாலோயர் ஆக கிளிக் பண்ணினால் வேலை செய்யவில்லை
மறுபடியும் ட்ரைப்பன்னி பாருங்க
\\பணத்திற்காக பாக்ஸிங் செய்ய போய் அங்க படும் இன்னல்..\\ ஆனாலும் இந்தக் காட்சிகளில் நம்மை விலா நோகச் சிரிக்க வைத்திருக்கிறார்!!
\\கடைசியில் அந்த பெண் அவர் கையை பிடித்து அடையாளம் கண்டுகொள்ளும் இடத்தில் கண்கள் ஈரமாகும்.\\ உண்மை. என் கண்கள் ஈரமாச்சு.
\\ நடிப்பில் இவர் அருகில் மட்டும் அல்ல இவரின் நிழலை கூட யாரும் நெருங்க முடியாது.\\ 100% சரி.
//Jayadev Das said...
\\பணத்திற்காக பாக்ஸிங் செய்ய போய் அங்க படும் இன்னல்..\\ ஆனாலும் இந்தக் காட்சிகளில் நம்மை விலா நோகச் சிரிக்க வைத்திருக்கிறார்!!
\\கடைசியில் அந்த பெண் அவர் கையை பிடித்து அடையாளம் கண்டுகொள்ளும் இடத்தில் கண்கள் ஈரமாகும்.\\ உண்மை. என் கண்கள் ஈரமாச்சு.
\\ நடிப்பில் இவர் அருகில் மட்டும் அல்ல இவரின் நிழலை கூட யாரும் நெருங்க முடியாது.\\ 100% சரி.
நன்றி நன்றி நன்றி
//
FOOD said...
அவரின் ஒவ்வொரு அசைவும் பேசும்.
100% சரி
Post a Comment