என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Thursday, June 2, 2011

108 இலவச ஆம்புலன்சில் பணியாற்ற விருப்பமா?


தமிழக அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் இயங்கும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் மருத்துவ உதவியாளர்டிரைவர்கள் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் ஜூன் 9ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, ‘108’ ஆம்புலன்ஸ் சேவைக்கான தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் ஜிவிகேஇஎம்ஆர்ஐ நிறுவனத்துடன் அவசரகால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து செயலாற்றுகிறது.
 
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 426 ஆம்புலன்சுகளுடன் ‘108’ சேவை மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கிறது. ஜிவிகேஇஎம்ஆர்ஐ நிறுவனம் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருக்கிறது. அதன்படிஓட்டுனர் பணியில் சேர விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 வயதுக்கு மேல் 38வயதுக்கு மிகாமல், 162.5 செ.மீ. உயரம் குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.6,489வழங்கப்படும்.
 
மருத்துவ உதவியாளர் பணியில் சேர விரும்புபவர்கள் பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம் (12ம் வகுப்புக்கு பிறகு 3 ஆண்டுகள்) படித்திருக்க வேண்டும். 21 வயது முதல் 30 வயதுள்ள ஆண் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம். மாத சம்பளம் ரூ.7,500 கிடைக்கும்.
 
ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான நேர்முகத் தேர்வுவரும் 9ம் தேதிசென்னை திருவல்லிக்கேணி, 15 பெல்ஸ் சாலைகஸ்தூரிபாகாந்தி தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 அவசரகால சேவை மைய தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் நடைபெறும். பணி நேரம் 12 மணி நேரம் ஷிப்ட் முறையில் இரவு மற்றும் பகல் என மாறும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணை அதேநாளில் வழங்கப்படும்.
 
வெளியூர்களில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரம் அறிய 044&2888 8060 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
வாக்களிக்க மறக்காதீர்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள். 

Post Comment

You are

12 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Add Reply

முதல் 108..

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

அடங்கோ

சசிகுமார் said... Add Reply

Thanks for this useful information

தினேஷ்குமார் said... Add Reply

நல்லெண்ணம் கொண்டோர் நலம்பெற வேண்டுகிறேன் ....

பயனுள்ள வேலைவாய்ப்பு பதிவு பயன் படுத்திக்கொள்ளுங்கள் ...

பஹ்ரைனில் வேலைவாய்ப்பு பற்றி என்னுடைய buzz ல் குறிப்பிட்டுள்ளேன் அதனையும் தகுதி உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்
https://mail.google.com/mail/?hl=en&shva=1#buzz/118032605221155757285

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
முதல் 108..

வாங்க வாங்க

Speed Master said... Add Reply

//
சி.பி.செந்தில்குமார் said...
அடங்கோ

ஏன் ஏன்

Speed Master said... Add Reply

//
சசிகுமார் said...
Thanks for this useful information

வாங்க வாங்க

Speed Master said... Add Reply

//
தினேஷ்குமார் said...
நல்லெண்ணம் கொண்டோர் நலம்பெற வேண்டுகிறேன் ....

பயனுள்ள வேலைவாய்ப்பு பதிவு பயன் படுத்திக்கொள்ளுங்கள் ...

பஹ்ரைனில் வேலைவாய்ப்பு பற்றி என்னுடைய buzz ல் குறிப்பிட்டுள்ளேன் அதனையும் தகுதி உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்
https://mail.google.com/mail/?hl=en&shva=1#buzz/118032605221155757285

வாங்க வாங்க

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

மக்களுக்கு பயனுள்ள பகிர்வு....!!!

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

சி.பி.செந்தில்குமார் said...
அடங்கோ//

அடங்குடா ராஸ்கல்....

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
மக்களுக்கு பயனுள்ள பகிர்வு....!!

நன்றிங்கோ

Speed Master said... Add Reply

//
MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
அடங்கோ//

அடங்குடா ராஸ்கல்....அப்படி சொல்லுங்க இந்த அங்கிள் நம்மள மாதிரி சின்னபசங்கள மிரட்றாரு