வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போக
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?
இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....
உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்
Post Comment
You are
23 comments:
உள்ளத்தை உருக்கும் கவிதை. பாராட்டுகள்.
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?//
பழகிப் poonathu.
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போக
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
...... sad, indeed!
//
DrPKandaswamyPhD said...
உள்ளத்தை உருக்கும் கவிதை. பாராட்டுகள்.
நன்றி சார்
//FOOD said...
//தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?//
தாய் மடியில் தலை வைத்து . . . . . . அப்பப்பப்பா அப்படியே உருகி எழுதிய வரிகள். உள்ளம் கவர்ந்தன.
நன்றி சார்
//இராஜராஜேஸ்வரி said...
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?//
பழகிப் poonathu.
நீங்களுமா
//hitra said...
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போக
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
...... sad, indeed!
ஆமாம்
அருமை
உங்களின் வலி புரிகிறது..
//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அருமை
நன்றி
//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
உங்களின் வலி புரிகிறது..
இது எனக்கு மட்டும் அல்ல பலருக்கும் தான்
நான் சொர்க்கம் கண்டவன். சொந்தங்களோடு சொந்த மண்ணில் வாழ்கிறேன்.
//பாலா said...
நான் சொர்க்கம் கண்டவன். சொந்தங்களோடு சொந்த மண்ணில் வாழ்கிறேன்.
இனிய வாழ்கை அமைந்தற்கு வாழ்த்துக்கள்
//தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?//
என்னய்யா இப்பிடி மனசு வலிக்க வச்சிட்டீங்களே....
//இதயம் நனைத்தஇந்த வாழ்வுஇளைய தலைமுறைக்காவதுஇனி கிடைக்குமா ?//
கிடைக்க வேண்டும் இறைவா....
// MANO நாஞ்சில் மனோ said...
//தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?//
என்னய்யா இப்பிடி மனசு வலிக்க வச்சிட்டீங்களே....
மனதின் வலி
//MANO நாஞ்சில் மனோ said...
//இதயம் நனைத்தஇந்த வாழ்வுஇளைய தலைமுறைக்காவதுஇனி கிடைக்குமா ?//
கிடைக்க வேண்டும் இறைவா....
ஆம்
நெகிழ வைத்த கவிதை
>>சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....
அட்டகாசம்.. மனதை டச் பண்ணீட்டீங்க.. பணத்துக்காக வெளி நாடு போய் தனிமையில் அவதிப்படுபவர்கள் பாவம்..
//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
நெகிழ வைத்த கவிதை
நன்றி
//
சி.பி.செந்தில்குமார் said...
>>சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....
அட்டகாசம்.. மனதை டச் பண்ணீட்டீங்க.. பணத்துக்காக வெளி நாடு போய் தனிமையில் அவதிப்படுபவர்கள் பாவம்..
உண்மைதான்
கவிதையால அழ வைக்காதே நண்பா!
//விக்கி உலகம் said...
கவிதையால அழ வைக்காதே நண்பா
அவ்வளவு சோகமாவா இருக்கு!!!!!
Post a Comment