என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Friday, March 4, 2011

எனது சந்தேகங்கள்

எனக்கு மட்டும் அல்லாமல் பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும்

ஆனால் அதையெல்லாம் நாம் கேட்பதற்கு தடையாக பல காரணிகள் இருக்கும்



1. காலமின்மை
2. வெட்கம்
3. பயம்
4. சோம்பேறிதனம்
5. அதன் பலனைத்தெரியாமல் இருப்பது


எனக்கு இருக்கும் சில சந்தேகங்களை இங்கே விவரித்துள்ளேன்
இனி வாரம் ஒரு முறை எனது சந்தேகங்களை பகிரலாம் என எண்ணியுள்ளேன்

பரந்திருக்கும் இவ்பதிவுலகத்தில் சிலவற்றிற்காவது பதில் வரும் என்றநம்பிக்கையோடு



எனது சந்தேகங்கள்

 (இதை ஏற்கனவே பலரிடம் கேட்டுள்ளேன்)



1 Japanese yen = 0.552670994 Indian rupees


1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees

நம் பணமதிப்பு அந்த நாடுகளை விட அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின் தங்கியிள்ளேம்

மக்கள் வாழுவதற்கான சிறந்த நாடுகளில் நம்மளை விட பணமதிப்பில்
குறைவாக உள்ள வியட்நாம் 5 வது இடத்தில் உள்ளது
யாரேனும் விளக்கவும்

பன்னிக்குட்டி ராமாசாமி அவர்கள் : ஜப்பானில் 100யென் தான் ஒரு பணம் என கூறினார்கள்

அப்படி என்றால் நாம் கூறும் 100 பைசாக்கள் போலதான் அந்த 100யென் மதிப்பா யாரேனும் விளக்கம் கூறுங்கள்

-----------------

வண்ணங்களுக்கு Colour என்று சொல்லுவோம் ஆனால் கணினியில் COLOR என்றுதான் கூறுகிறாம் ஏன் என்று காரணம் சொல்லவும்
-----------------

பெரிய பெரிய நிறுவன்ங்களுக்கு 24 மணி நேரம் மின்சார இணைப்புக்குடுத்து ஏழைகளையும் நடுத்தரமக்களையும் கஸ்டப்படுத்துவது ஏன்

-----------------

வெயில் அதிகமாக இருக்கும் நம் நாட்டில் சோலர் சிஸ்ட்த்தை குறைந்த பட்சம் பெரிய பணக்கார நிறுவணங்கள் கூட கண்டுகொள்ளாதது ஏன்

-----------------

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காமாராஜர் மாதிரி ஆட்சி செய்வேம்னு சொல்றாங்க

ஆனால் அவர் ஆட்சியையையும் நாம் தோற்கடித்தோமே ஏன்
-----------------

ஒரு நாட்டின் பிரச்சனைகளுக்கும் அதன் முன்றேத்திற்கும் தடையாகவும் முக்கியகாரணமாக இருக்கும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சரியான சட்டங்களும், திட்டங்களும் இல்லை ஏன்

-----------------

ஆணுறை என்பது தேவையில்ல குழந்தை உருவாக்கத்தை தடைசெய்ய கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாதணம்

ஆனால் அது தவறுசெய்பவர்களுக்கு ஒரு பாதுகாப்புகாரணமாகவே விளம்பரப்படுத்தப்படுகிறதே ஏன்

---------------------------------------------------------------------------------






மதுரை பொண்ணு said...
மிஸ்டர் ஸ்பீட் மாஸ்டர்..
எங்க சங்கத்து தலைவருக்கு விருது குடுத்து இருக்கீங்கள்.. மதுரை பொண்ணின் வாழ்த்துக்கள்.. சரி விருது குடுத்து இருக்கீங்க.. சாப்பாடு,கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் குடுக்க மாட்டேன்களா..

அப்பறம் மனாசே(மனோ) வை பத்தி இங்கே ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்.தனக்கு எத்தனை தெரியுமோ அதனையும் எனக்கு கற்று தருவார்.புத்தக முகத்தில் எனக்கு கிடைத்த ஒரு தங்கமான நண்பர்.இவரை வைத்து தான் எனக்கு இன்னொரு தங்கமான நண்பர் கிடைத்தார்.அதற்க்கு நான் வாழ் நாள் முழுவதும் நன்றி சொல்ல வேண்டும்.

இன்று எனக்கும் கொஞ்சம் மொழிகள் தெரிந்து கற்று கொண்டேன் என்றால் அதற்கு இவரும் இவரின் நண்பர் ஒருவரும் தான் காரணம்.இந்த பதிவு உண்மையில் என் நண்பரை மகிழ்ச்சி கொள்ள வைத்து உள்ளது..

ஸ்பீட் மாஸ்டற்கு என் நன்றிகள்.. யாருக்கும் தெரியாத ஒரு மனோவினை பற்றி ஒரு கருத்து சொல்கிறேன்.மனோவிற்கு பல மொழிகள் தெரிவதோடு நன்றாய் பியானோ வாசித்தும் பாட்டு பாடுபவரும் கூட.. தற்போது அவருக்கு போட்டியாக அவர் மகனும் கற்று கொண்டு இருக்கிறார்.


** பல மொழி பகலவன் வாழ்க.. வாழ்க.. வாழ்க.. ***..



இந்த மறுமொழி மனோ சாருக்கு விருதுவழங்கியதற்காக மதுரைபொண்ணு அவர்கள் தெரிவித்த கருத்து

மிக்க நன்றி மதுரைபொண்ணு அவர்களே மிக்க நன்றி ஒரு நல்ல மனிதரைப்பற்றி மேலும் தெரிந்து கொண்டது


மனோ சார் : உங்களுக்குள் இப்படி மேலும் ஒரு திற்மை இருப்பது மேலும் மகிழ்ச்சியாய் இருக்கிறது வாழ்த்துக்கள்


உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்



Post Comment

You are

70 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

படிச்சிட்டு வற்றேன்...

Speed Master said... Add Reply

//
சங்கவி said...
:))

வாங்க

Speed Master said... Add Reply

//# கவிதை வீதி # சௌந்தர் said...
படிச்சிட்டு வற்றேன்...

ஓகே வாங்க

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

//////
வண்ணங்களுக்கு Colour என்று சொல்லுவோம் ஆனால் கணினியில் COLOR என்றுதான் கூறுகிறாம் ஏன் என்று காரணம் சொல்லவும்////////

ASCII No COLOUR-க்கு 0000 என வரும் இது கணினி எடுத்துக் கொள்ளாது
அதனால் COLOR என்று கணினியில் குறிப்பிடுகிறோம்..

மேலும் வார்த்தையில் இருக்கும் கடினத்தன்னை போக்க இது போன்று சில வார்த்தைகளையும் சுறுக்கி உள்ளார்கள்..

ஏதோ எனக்கு தெரிந்தது..

Speed Master said... Add Reply

// கவிதை வீதி # சௌந்தர் said...
//////
வண்ணங்களுக்கு Colour என்று சொல்லுவோம் ஆனால் கணினியில் COLOR என்றுதான் கூறுகிறாம் ஏன் என்று காரணம் சொல்லவும்////////

ASCII No COLOUR-க்கு 0000 என வரும் இது கணினி எடுத்துக் கொள்ளாது
அதனால் COLOR என்று கணினியில் குறிப்பிடுகிறோம்..

மேலும் வார்த்தையில் இருக்கும் கடினத்தன்னை போக்க இது போன்று சில வார்த்தைகளையும் சுறுக்கி உள்ளார்கள்..

ஏதோ எனக்கு தெரிந்தது..


நன்றி செளந்தர் COLOR என்ன ASCII No கோட் வரும்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees//

இதுக்கு பதில் நம்ம விக்கி உலகம் குமாருக்கு தெரியும். ஏன்னா பார்ட்டி வியட்னாம்'ல தான் இருக்கார்....

சக்தி கல்வி மையம் said... Add Reply

இதில் நிறைய சந்தேகங்கள் எனக்கும்..

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காமாராஜர் மாதிரி ஆட்சி செய்வேம்னு சொல்றாங்க

ஆனால் அவர் ஆட்சியையையும் நாம் தோற்கடித்தோமே ஏன்//

சரியான சாட்டையடி கேள்விதான்....

Unknown said... Add Reply

அதாவது = $1 = 45 ரூபா

அதே $1 = 20,000 dong

எனக்கு சரியா கணக்கு வராதுங்கோ ஹி ஹி!

ஆனா யார் சொன்னா உங்களுக்கு மக்கள் வாழ ஏற்ற இடம்னா அது cost of living என்பதையும் சேர்த்து என்று............மக்கள் சந்தோசமா வாழ என்பது என்ன சொல்ல வராங்கன்னா குற்றம் எனும் விஷயம் கம்மி........அதாவது இங்க நீங்க நடு இரவு 1 மணிக்கு பெண் தனியா நடந்து இருட்டுல போனாலும் எந்த வித தவறும் நடக்காது அப்படி வச்சிருக்காங்க............அதே நேரத்துல இந்தியாவில வாங்கிற ஒரு பொருளோட மதிப்பு இங்க 3 மடங்கு ஜாஸ்தி!

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//ஆணுறை என்பது தேவையில்ல குழந்தை உருவாக்கத்தை தடைசெய்ய கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாதணம்

ஆனால் அது தவறுசெய்பவர்களுக்கு ஒரு பாதுகாப்புகாரணமாகவே விளம்பரப்படுத்தப்படுகிறதே ஏன்//

நம்ம ஆளுங்க லேசு பட்டவனுகளா.....!!!

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//மனோ சார் : உங்களுக்குள் இப்படி மேலும் ஒரு திற்மை இருப்பது மேலும் மகிழ்ச்சியாய் இருக்கிறது வாழ்த்துக்கள்//

மிகவும் நன்றி மக்கா.....

செங்கோவி said... Add Reply

மனோ சார் பற்றி மேலும் பல தகவல்களுக்கு நன்றி ..!

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees//

இதுக்கு பதில் நம்ம விக்கி உலகம் குமாருக்கு தெரியும். ஏன்னா பார்ட்டி வியட்னாம்'ல தான் இருக்கார்...

அவரையே கேட்போம்

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
//எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காமாராஜர் மாதிரி ஆட்சி செய்வேம்னு சொல்றாங்க

ஆனால் அவர் ஆட்சியையையும் நாம் தோற்கடித்தோமே ஏன்//

சரியான சாட்டையடி கேள்விதான்..

அரசியல புரியல

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
அதாவது = $1 = 45 ரூபா

அதே $1 = 20,000 dong

எனக்கு சரியா கணக்கு வராதுங்கோ ஹி ஹி!

ஆனா யார் சொன்னா உங்களுக்கு மக்கள் வாழ ஏற்ற இடம்னா அது cost of living என்பதையும் சேர்த்து என்று............மக்கள் சந்தோசமா வாழ என்பது என்ன சொல்ல வராங்கன்னா குற்றம் எனும் விஷயம் கம்மி........அதாவது இங்க நீங்க நடு இரவு 1 மணிக்கு பெண் தனியா நடந்து இருட்டுல போனாலும் எந்த வித தவறும் நடக்காது அப்படி வச்சிருக்காங்க............அதே நேரத்துல இந்தியாவில வாங்கிற ஒரு பொருளோட மதிப்பு இங்க 3 மடங்கு

ஓ அப்படியா நன்றி சார்

Speed Master said... Add Reply

//MANO நாஞ்சில் மனோ said...
//ஆணுறை என்பது தேவையில்ல குழந்தை உருவாக்கத்தை தடைசெய்ய கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாதணம்

ஆனால் அது தவறுசெய்பவர்களுக்கு ஒரு பாதுகாப்புகாரணமாகவே விளம்பரப்படுத்தப்படுகிறதே ஏன்//

நம்ம ஆளுங்க லேசு பட்டவனுகளா.....!!!


எல்லாம் பயங்கரமான ஆளுங்கதான்

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
//மனோ சார் : உங்களுக்குள் இப்படி மேலும் ஒரு திற்மை இருப்பது மேலும் மகிழ்ச்சியாய் இருக்கிறது வாழ்த்துக்கள்//

மிகவும் நன்றி மக்கா.....


ஒரு பாடலை பாடி இசைத்து அனுப்புங்கள்

Speed Master said... Add Reply

//
செங்கோவி said...
மனோ சார் பற்றி மேலும் பல தகவல்களுக்கு நன்றி ..!


வருகைகு நன்றி சார் தொடர்ந்து வருகைதாருங்கள்

Anonymous said... Add Reply

மனிதனாக வாழும் வழிகளை கடைப்பிடித்தால் கண்டிப்பாக மனிதாக வாழ விட மாட்டார்கள்

உணவு உலகம் said... Add Reply

இவையெல்லாம் தெளிந்த சந்தேகங்களா?
தேர்ந்தெடுத்த சந்தேகங்களா?

Speed Master said... Add Reply

//"குறட்டை " புலி said...
மனிதனாக வாழும் வழிகளை கடைப்பிடித்தால் கண்டிப்பாக மனிதாக வாழ விட மாட்டார்கள்


உண்மைதான்

Speed Master said... Add Reply

//FOOD said...
இவையெல்லாம் தெளிந்த சந்தேகங்களா?
தேர்ந்தெடுத்த சந்தேகங்களா?


தெளிவில்லாமலும் தேர்ந்தெடுக்க தெரியாமலும் இருப்பவனின் சந்தேகங்கள்

Anonymous said... Add Reply

நியாயமான சந்தேகம்தான் ஆனா புரியல..மேதைக சொல்வாங்க

Anonymous said... Add Reply

எப்படி இப்படியெல்லாம் சந்தேகம் வருதா...நைட் ஓவராயிடுச்சா

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
நியாயமான சந்தேகம்தான் ஆனா புரியல..மேதைக சொல்வாங்க

அப்ப நீங்க மேதை இல்லையா?

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
எப்படி இப்படியெல்லாம் சந்தேகம் வருதா...நைட் ஓவராயிடுச்சா

ஹி ஹி நம்க்கு பச்சதண்ணியே ஓவர்

அந்த பழக்கமெல்லாம் இல்லீங்க

அஞ்சா சிங்கம் said... Add Reply

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காமாராஜர் மாதிரி ஆட்சி செய்வேம்னு சொல்றாங்க

ஆனால் அவர் ஆட்சியையையும் நாம் தோற்கடித்தோமே ஏன்////////////////////////////////////////

அவர் ஆட்சியை யாரும் தோற்கடிக்க வில்லை அவர் முதலமைச்சர் பதவியை விட்டுவிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஆனார் .....

பிறகு இந்திரா காந்தி மேல் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக சின்டிகட் காங்கிரஸ் என்று கட்சி ஆரம்பித்தார் .....

அவர் கட்சி தலைவராக மட்டுமே தன்னை முன்னிலை படுத்தினார் முதல்வராக அல்ல .............

அவரை தோற்க்கடித்து இன்று காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லும் அந்த மானங்கெட்ட கோஷ்டிதான்

Speed Master said... Add Reply

//அஞ்சா சிங்கம் said...
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தா


நன்றி சார்

தமிழ் 007 said... Add Reply

சந்தேகம் இவ்வளவு தானா இல்ல இன்னும் இருக்கா நண்பரே!

Speed Master said... Add Reply

//தமிழ் 007 said...
சந்தேகம் இவ்வளவு தானா இல்ல இன்னும் இருக்கா நண்பரே!

இன்னும் பல இருக்கு

கொஞ்சம் கொஞ்சமாக கேட்கிறேன்

தமிழ் 007 said... Add Reply

நல்லவனா இருக்க வேண்டும் என்பார்கள் ஆனா நல்லவனா இருந்தா இழிச்சா வாயன்னு சொல்லுவானுங்க...

இதாங்க உலகம்.

Speed Master said... Add Reply

//
தமிழ் 007 said...
நல்லவனா இருக்க வேண்டும் என்பார்கள் ஆனா நல்லவனா இருந்தா இழிச்சா வாயன்னு சொல்லுவானுங்க...

இதாங்க உலகம்.


உண்மைதான்

மாணவன் said... Add Reply

//எனது சந்தேகங்கள்"//

உங்களுக்கே சந்தேகமுன்னா?? நாங்க யார போயி கேட்பது??

:))

Speed Master said... Add Reply

//மாணவன் said...
//எனது சந்தேகங்கள்"//

உங்களுக்கே சந்தேகமுன்னா?? நாங்க யார போயி கேட்பது??

:))

யப்பா முடியல

மாணவன் said... Add Reply

மனிதனாக வாழ வழிகள் அனைத்தும் நாம் கடைபிடிக்க வேண்டியை...

:)

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

ரொம்ப பெரிய பதிவுதான்

Speed Master said... Add Reply

//
மாணவன் said...
மனிதனாக வாழ வழிகள் அனைத்தும் நாம் கடைபிடிக்க வேண்டியை...

:)

நன்றி

Speed Master said... Add Reply

//சி.பி.செந்தில்குமார் said...
ரொம்ப பெரிய பதிவுதான்


கொஞ்சம் ஓவரா இருக்கா?

R. Gopi said... Add Reply

ஸ்பீட் மாஸ்டர், exchange rate குறித்த வினாவிற்கு ஒரு பின்னூட்டத்தில் திருப்திகரமான விடை அளித்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. கொஞ்சம் குத்து மதிப்பாக சொல்கிறேன்.

exchange rate எப்படித் தீர்மானிக்கப்படுகிறது theoretical ஆக?

interest rate, inflation, exchange rate மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

purchasing power parity என்பது பற்றிக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். இந்தியாவில் மினரல் வாட்டர் பாட்டில் (ஒரு லிட்டர் கின்லே) பதினைந்து ரூபாய் என்றால் அமெரிக்காவில் அதன் விலை ௦0.33 டாலராக இருக்கவேண்டும். நடைமுறையில் அவ்வாறு இருப்பதில்லை. அங்கே கிட்டத்தட்ட ஒரு டாலர். தண்ணீருக்கான demand, supply இரு தேசங்களிலும் வேறு வேறு. மேலும் இந்தியாவில் இன்னொரு அம்சம் உண்டு. ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட range இல் exchange rateஐ வைத்திருக்க விரும்புகிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு.

சுருக்கமாகச் சொன்னால் இவ்வளவுதான். இரு தேசங்களில் ஒரே பொருளின் விலை விகிதமும், exchange rate உம் ஒன்றாக இருக்கும். இது புத்தகம் சொல்வது. நடைமுறையில் அவ்வாறு இருப்பதில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு. குறிப்பிட்ட நாட்டின் பணத்திற்கான தேவை (demand), அந்த நாட்டின் வட்டி விகிதம், அந்த நாட்டின் அரசியல், பொருளாதார நிலைப்பாடு, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

interest rate parity பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன். உங்களிடம் நிறைய டாலர் இருக்கிறது. நீங்கள் டாலரை ரூபாயாக மாற்றி இந்தியாவில் டெபாசிட்டில் போடுகிறீர்கள்

உங்கள் நண்பரிடம் நிறைய இந்திய ரூபாய் இருக்கிறது. அவர் அதை டாலராக மாற்றி ஆறு மாதத்திற்கு அமெரிக்காவில் டெபாசிட்டில் போடுகிறார். ஆறு மாதம் கழித்து அதை ரூபாயாக மாற்றுகிறார்.

theory படி உங்களிடம் இருக்கும் ரூபாயும் உங்கள் நண்பரிடம் இருக்கும் ரூபாயும் ஆறுமாதம் கழித்து சமமாக இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் என்னாகும்? எந்த வித இடரும் (risk) இல்லாமல் உங்களால் நிறைய சம்பாதிக்க முடியும்.

interest rate parity குறுகிய காலத்திய (short-term) exchange rate பற்றி அறிந்துகொள்ளவும் purchasing power parity நீண்ட கால (long-term) exchange rate பற்றியும் அறிந்துகொள்ள உதவுகிறது.

இது பற்றி மேலும் அறிய வேண்டுமெனில் வகுப்பறை தேவை. numerical examples தேவை. நடைமுறையில் என்ன நடக்கிறது என்பது பற்றியும் ஒரு பின்னூட்டத்தில் நிச்சயம் சொல்லமுடியாது. அல்லது எனக்கு சொல்லத் தெரியவில்லை.

exchange rate பற்றி அறிந்துகொள்ள வேண்டுமெனில் முதலில் interest rate, inflation பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ஆர்வமிருப்பின் நீங்கள் எனக்குப் போன் பண்ணுங்கள். நான் விளக்குகிறேன்.

R. Gopi said... Add Reply

Colour is British English. Color is American English

R. Gopi said... Add Reply

\\பெரிய பெரிய நிறுவன்ங்களுக்கு 24 மணி நேரம் மின்சார இணைப்புக்குடுத்து ஏழைகளையும் நடுத்தரமக்களையும் கஸ்டப்படுத்துவது ஏன்\\

Larger interest. ஒரு மென்பொருள் நிறுவனத்திற்கு மின்சாரம் தரவில்லை எனில் பல கொடி நஷ்டம் ஆகும். ஒரு தொழிற்சாலைக்கு மின்சாரம் தரவில்லை எனில் உற்பத்தி நிறைய பாதிக்கப்படும்.

R. Gopi said... Add Reply

\\வெயில் அதிகமாக இருக்கும் நம் நாட்டில் சோலர் சிஸ்ட்த்தை குறைந்த பட்சம் பெரிய பணக்கார நிறுவணங்கள் கூட கண்டுகொள்ளாதது ஏன்\\

நேரடியான விடை எனக்குத் தெரியவில்லை.

நிறுவனங்களில் எந்த ஒரு projectஐ எடுத்துக் கொள்வது என்றாலும் cost benefit analysis செய்வார்கள். அதன்படி சோலார் சிஸ்டம் ஒத்து வராமல் போகலாம். வேறு காரணங்களும் இருக்கமுடியும். எனக்கு சரியாகத் தெரியவில்லை.

R. Gopi said... Add Reply

\\எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காமாராஜர் மாதிரி ஆட்சி செய்வேம்னு சொல்றாங்க

ஆனால் அவர் ஆட்சியையையும் நாம் தோற்கடித்தோமே ஏன்\\

கூகிளில் நிறைய விடை உண்டு. தேடுங்கள்:-)

எல் கே said... Add Reply

//நிறுவனங்களில் எந்த ஒரு projectஐ எடுத்துக் கொள்வது என்றாலும் cost benefit analysis செய்வார்கள். அதன்படி சோலார் சிஸ்டம் ஒத்து வராமல் போகலாம். /

இதுவும் அப்புறம் இடமும்

Chitra said... Add Reply

வண்ணங்களுக்கு Colour என்று சொல்லுவோம் ஆனால் கணினியில் COLOR என்றுதான் கூறுகிறாம் ஏன் என்று காரணம் சொல்லவும்


...I thought it was American way of spelling color.... They do not use "u". Like, color, honor etc....

Speed Master said... Add Reply

// Gopi Ramamoorthy

தங்களால் முடிந்த வரை சிறப்பாக விளக்கமளித்தற்கு நன்றி

Speed Master said... Add Reply

// Gopi Ramamoorthy

முடிந்தால் இதனைப்பற்றி விரிவாக ஒரு பதிவென்ரு போடவுனம்

Speed Master said... Add Reply

//Gopi Ramamoorthy said...
Colour is British English. Color is American English

ஓஹோ இதானா

Speed Master said... Add Reply

//Gopi Ramamoorthy said...
\\வெயில் அதிகமாக இருக்கும் நம் நாட்டில் சோலர் சிஸ்ட்த்தை குறைந்த பட்சம் பெரிய பணக்கார நிறுவணங்கள் கூட கண்டுகொள்ளாதது ஏன்\\

நேரடியான விடை எனக்குத் தெரியவில்லை.

நிறுவனங்களில் எந்த ஒரு projectஐ எடுத்துக் கொள்வது என்றாலும் cost benefit analysis செய்வார்கள். அதன்படி சோலார் சிஸ்டம் ஒத்து வராமல் போகலாம். வேறு காரணங்களும் இருக்கமுடியும். எனக்கு


நன்றி

Speed Master said... Add Reply

//Gopi Ramamoorthy said...
\\எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காமாராஜர் மாதிரி ஆட்சி செய்வேம்னு சொல்றாங்க

ஆனால் அவர் ஆட்சியையையும் நாம் தோற்கடித்தோமே ஏன்\\

கூகிளில் நிறைய விடை உண்டு. தேடுங்கள்:-)


நன்றி

Speed Master said... Add Reply

//
எல் கே said...
//நிறுவனங்களில் எந்த ஒரு projectஐ எடுத்துக் கொள்வது என்றாலும் cost benefit analysis செய்வார்கள். அதன்படி சோலார் சிஸ்டம் ஒத்து வராமல் போகலாம். /

இதுவும் அப்புறம் இடமும்

நன்றி

Speed Master said... Add Reply

//Chitra said...
வண்ணங்களுக்கு Colour என்று சொல்லுவோம் ஆனால் கணினியில் COLOR என்றுதான் கூறுகிறாம் ஏன் என்று காரணம் சொல்லவும்


...I thought it was American way of spelling color.... They do not use "u". Like, color, honor etc....


நன்றி மேடம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Add Reply

எல்லாமே நல்ல சந்தேகங்கள்! நமக்குத்தான் ஒண்ணுக்குமே பதில் தெரியல! ஆள விடுங்க சாமியோவ்!!!

Speed Master said... Add Reply

//ஓட்ட வட நாராயணன் said...
எல்லாமே நல்ல சந்தேகங்கள்! நமக்குத்தான் ஒண்ணுக்குமே பதில் தெரியல! ஆள விடுங்க சாமியோவ்!!!

நீங்களுமா

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

அப்பாடா... எல்லாரும் சந்தேகங்களை தீர்த்து வெச்சிட்டாங்க.....!

Speed Master said... Add Reply

/ பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்பாடா... எல்லாரும் சந்தேகங்களை தீர்த்து வெச்சிட்டாங்க.....!


நீங்க பிரபல பதிவர்னு நிருப்பீச்சூட்டீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

///////Speed Master said...
/ பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்பாடா... எல்லாரும் சந்தேகங்களை தீர்த்து வெச்சிட்டாங்க.....!


நீங்க பிரபல பதிவர்னு நிருப்பீச்சூட்டீங்க////////

இதுல உள்குத்து எதுவுமில்லியே?

Speed Master said... Add Reply

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////Speed Master said...
/ பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்பாடா... எல்லாரும் சந்தேகங்களை தீர்த்து வெச்சிட்டாங்க.....!


நீங்க பிரபல பதிவர்னு நிருப்பீச்சூட்டீங்க////////

இதுல உள்குத்து எதுவுமில்லியே?


உங்களுக்கு தெரிந்த பதில்களை சொல்லுங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

என்னது தெரிந்த பதிலா அதான் ஏற்கனவே எல்லாரும் சொலிட்டாங்களே.....?

Speed Master said... Add Reply

/பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது தெரிந்த பதிலா அதான் ஏற்கனவே எல்லாரும் சொலிட்டாங்களே.....?


இன்னும் பல பதில்கள் வேண்டும்

R. Gopi said... Add Reply

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

சமுத்ரா said... Add Reply

good questions:)

Speed Master said... Add Reply

//
சமுத்ரா said...
good questions:)


நன்றி

Jayadev Das said... Add Reply

\\1 Japanese yen = 0.552670994 Indian rupees


1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees

நம் பணமதிப்பு அந்த நாடுகளை விட அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின் தங்கியிள்ளேம்

மக்கள் வாழுவதற்கான சிறந்த நாடுகளில் நம்மளை விட பணமதிப்பில்
குறைவாக உள்ள வியட்நாம் 5 வது இடத்தில் உள்ளது
யாரேனும் விளக்கவும்\\ ஒரு அமரிக்க டாலர் =48 இந்திய ரூபாய் என்றால், உலக சந்தையில் சராசரியாக ஒரு அமெரிக்க டாலரில் செய்ய முடிவதை 48 இந்திய ரூபாயை போட்டால்தான் செய்ய முடியும். [இது சரியா தப்பான்னு தெரியலை, ஆனா intuition இதுதான் சரின்னு சொல்லுது. ஹி..ஹி..ஹி..] அந்த வகையில் தான் மற்ற எல்லா கரன்சிகளும் மதிப்பு பெறுகின்றன. மேலும், ஒரு நாடு கண்ணா பின்னா வென்று நோட்டுகளை அச்சடித்துத் தள்ளிவிட முடியாது, அதற்க்குச் சமமான தங்கம், இயற்க்கை வளம் போன்றவற்றை வைத்தே அச்சடிக்க முடியும். ஜப்பான் Yen மதிப்பு குறைவாக இருந்தாலும், அவர்களின் மொத்த பொருளாதாரக் கையிருப்பில் விஞ்சியிருப்பார்கள், [அமெரிக்காவுக்கு கடன் கொடுப்பதில் இவர்கள்தான் நம்பர் ஒன்னாம். ] மற்றபடி, ஜப்பான் ஜனங்க உழைச்சாங்க, பொருளாதாரத்துல முன்னேறினார்கள், வியட்நாம் அரசு மக்களுக்கு நல்ல பாதுகாப்பு கொடுக்கிறது. அதற்கும் பண மதிப்பிற்கும் சம்பந்தமில்லை.

Jayadev Das said... Add Reply

\\பெரிய பெரிய நிறுவன்ங்களுக்கு 24 மணி நேரம் மின்சார இணைப்புக்குடுத்து ஏழைகளையும் நடுத்தரமக்களையும் கஸ்டப்படுத்துவது ஏன்?\\ குஜராத்தில் எல்லோருக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப் படுகிறது. இங்கே, தொழிலதிபர்கள் ஆட்சியிலிருப்பவர்களை நன்றாக கவனித்து விடுவார்கள், ஆதலால் அவர்களுக்கு நல்ல விளைச்சல் உள்ள விவாசாய நிலமாகக் கொடுப்பார்கள், சாலை வசதி, தடையற்ற மின்சாரம் கிடைக்கும். நல்ல குடிநீர் உள்ள இடத்தில் கோலக் கம்பனிக்காரன் வாங்கி, தண்ணீர் பாட்டிலை நம்மிடமே விற்ப்பான். எல்லாம் ஆளுங் கட்சிகளின் ஆசிர்வாதம் தான். கேட்டால், நாங்கள் அந்நிய முதலீட் கொண்டு வந்தோம், வேலை வாய்ப்பு, தொழிற் புரட்சி என்று பீலா விடுவார்கள். உண்மையில் நடப்பது, நமது வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்ட இவர்கள் காசு வாங்கிக் கொண்டு அனுமதிக்கிறார்கள். [அக்கறை உள்ளவர்கள், எங்கேயாவது தரிசு நிலத்தில் பொய் தொழிற்சாலை ஆரம்பிக்கச் சொல்லும்களேன் பார்ப்போம்!!]

Jayadev Das said... Add Reply

\\ஆனால் அவர் ஆட்சியையையும் நாம் தோற்கடித்தோமே ஏன்\\ அவர் உண்மையைச் சொல்லி நேர்மையாக வாக்கு கேட்டார். அவரை எதிர்த்தவர்கள், பொய், புனை சுருட்டு பித்தலாட்டம் செய்தார்கள். நடக்கவே முடியாததை நடத்திக் காட்டுவோம் என்று சொல்லி ஏமாற்றினார்கள். [இப்போது ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்பது போல அப்போது, ரூபாய்க்கு மூணு படி அரிசி போடுவோம், இல்லாவிட்டால் செருப்பால் அடியுங்கள் என்றார்கள், ஆட்சிக்கு வந்ததுக்கப்புறம்-இரண்டு ஏக்கர் நிலம் தருவோம்கதையே தான் நடந்தது.] காமராஜர் மீது சேற்றை வாரியிறைத்தார்கள். நன்றாக தேனொழுகப் பேசினார்கள். அவர்கள் பேசுவதெல்லாம் உண்மை என்று மக்கள் நம்பினார்கள். அத்தனையும் பித்தலாட்டம் என்று பின்னர்தான் தெரிந்தது, ஆனாலும் ஒன்னும் செய்ய முடியவில்லை. அதற்க்காபுரம் நல்ல தலைவர்கள் இல்லை, இந்த 'கலக' முடிச்சவிக்கிகளே மாறி மாறி ஏய்த்தார்கள் , இன்னமும் ஏய்க்கிரார்கள்.

Jayadev Das said... Add Reply

\\ஒரு நாட்டின் பிரச்சனைகளுக்கும் அதன் முன்றேத்திற்கும் தடையாகவும் முக்கியகாரணமாக இருக்கும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சரியான சட்டங்களும், திட்டங்களும் இல்லை ஏன்\\ அவனுங்க எதைத்தான் மக்களுக்கு செய்கிரானுங்க இதைச் செய்ய!! ஒரு சின்ன விஷயம், மரம் வைத்தால் நிழல் தரும், சுகாதாரமான காற்று வரும், மழை வரும், நாடு செழிக்கும்- இதை இந்த அரசு செயல் படுத்த முனைகிறதா? மக்கள் நலனை நினைப்பவன் சாராயம் விர்ப்பானா, ஆற்று மணலைக் கொள்ளையடிப்பானா? இதையே பன்னாதவன்களா ஜனத் தொகையைப் பத்தி கவலைப் படுவாங்க? இருக்கும் வரை சுருட்டிக் கொண்டு ஓடு, நாடு எக்கேடு கேட்டா எனக்கென்ன??

Jayadev Das said... Add Reply

\\ஆனால் அது தவறுசெய்பவர்களுக்கு ஒரு பாதுகாப்புகாரணமாகவே விளம்பரப்படுத்தப்படுகிறதே ஏன்\\ கள்ளத் தொடர்பை தடுக்க முடியாது, ஆனால் எய்ட்ஸில் இந்திய உலகிலேயே முதலிடம். கள்ளத் தொடர்பு தவறு என்றாலும், அவன் உயிர் போவது இன்னமும் பெரிய பிரச்சினையாச்சே. அதுக்காக இப்படி விளம்பரம். [என்ன பண்ணியும் விட்டில் பூச்சியா போயி மாட்டுறவன் மாட்டிகிட்டேதான் இருக்கான், குறிப்பா இந்த லாரி ஓட்டுனர்கள்.

Jayadev Das said... Add Reply

மனிதனாக வாழ வழிகள், ம்ம்ம். நல்லாயிருக்கு, நன்றி.

Jayadev Das said... Add Reply

இங்கே [Tamil Nadu], தொழிலதிபர்கள் ஆட்சியிலிருப்பவர்களை நன்றாக கவனித்து விடுவார்கள், ஆதலால் அவர்களுக்கு நல்ல விளைச்சல் உள்ள விவாசாய நிலமாகக் கொடுப்பார்கள், சாலை வசதி, தடையற்ற மின்சாரம் கிடைக்கும். நல்ல குடிநீர் உள்ள இடத்தில் கோலக் கம்பனிக்காரன் வாங்கி, தண்ணீர் பாட்டிலை நம்மிடமே விற்ப்பான். எல்லாம் ஆளுங் கட்சிகளின் ஆசிர்வாதம் தான். கேட்டால், நாங்கள் அந்நிய முதலீட் கொண்டு வந்தோம், வேலை வாய்ப்பு, தொழிற் புரட்சி என்று பீலா விடுவார்கள். உண்மையில் நடப்பது, நமது வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்ட இவர்கள் காசு வாங்கிக் கொண்டு அனுமதிக்கிறார்கள். [அக்கறை உள்ளவர்கள், எங்கேயாவது தரிசு நிலத்தில் பொய் தொழிற்சாலை ஆரம்பிக்கச் சொல்லும்களேன் பார்ப்போம்!!]-இதெல்லாம் நடப்பது தமிழ் நாட்டில், குஜராத்தில் தொழில், விவசாயம் என எல்லா வகையிலும் முன்னேற்றம் உள்ளது.