என்னை பற்றி

My photo
நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம்

என்னை ரசிப்பவர்கள்

Tuesday, April 19, 2011

கேப்டன் விஜயகாந்த் - சிறு குறிப்புகள்

விஜயகாந்த்தின் நிஜப் பெயர் நாராயணன். அது தாத்தாவின் பெயர் என்பதால், விஜயராஜ் என வீட்டில் அழைக்கிறார்கள். சினிமாவுக்கு வந்த பின் டைரக்டர் எம்.ஏ.காஜா வைத்த பெயர் விஜயகாந்த். பின், அடுத்த படத்திலேயே டைரக்டர் விஜயன் அதை அமிர்தராஜ் என மாற்றியும் நிலைத்தது விஜயகாந்த்தான் !




வீட்டுப் பூஜை அறையில் மெக்கா மதீனா படங்களும்,இயேசு- மேரி மாதா படங்களும், திருப்பதி வெங்கடாசலபதியும்,முருகனும்,பிள்ளையாரும் சிறப்பிடம் பெறுகிறார்கள். இப்பவும் மனசு சரி இல்லை என்றால், கண்ணூர் தர்காவுக்குப் போய் வழிபாடு செய்வார் விஜயகாந்த்!

ஐயப்பன் கோயிலுக்கு 18 வருடங்களாகச் சென்று வந்தவர், நடுவே பக்தர்கள் இவர் காலில் விழுந்து வணங்குவதைப் பழக்கமாகக்கொண்டவுடன்,இப்போது கோயிலுக்கு செல்வது இல்லை !



எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்த்துக்கு வயது 37 ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார். விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் !

http://speedsays.blogspot.com/


தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984 – ல் ‘மதுரை சூரன்’ முதல் ‘ஜனவரி 1’ படம் வரை 18 படங்களும் 1985 –ம் ஆண்டில் மட்டும் ‘அலை ஒசை’யில் ஆரம்பித்து ‘நானே ராஜா நானே மந்திரி’ வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது !
http://speedsays.blogspot.com/
அதே போல் எந்த நடிகரின் 100 வது படமும் அவ்வளவு பிரமாதமாக ஹிட் ஆனது கிடையாது
அதறகு விதிவிலக்கு கேப்டன் பிரபாகரன்


பள்ளியில் படிக்கும்போது ஃபுட் பால் பிரமாதமாக விளையாடுவார். இப்போதும் ஃபுட்பால் வெறியர். இங்கிலாந்து வரை போய் நேரில் ஃபுட்பால் போட்டிகளைப் பார்த்து ரசிப்பார். அவரது மகன்களுக்கும் இப்போது ஃபுட்பால் பிரியம் வந்து விட்டது !

விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம்... ‘இனிக்கும் இளமை’ அதற்குப் பிறகு எல்லாமே ஹீரோ வேடம்தான் !

இதுவரை விஜயகாந்த் 152 படங்களில் நடித்திருக்கிறார். 153 – வது படம் அவரது டைரக்ஷனில் வருகிறது. இவ்வளவு நாள் ஃபில்டில் இருந்ததற்கு ஒரு படம் டைரக்ட் செய்தாக வேண்டும் என்பது அவரது விருப்பம் !


நடிகர் ராஜேஷின் தம்பி திருமணத்தில்தான் எம்.ஜி.ஆரோடு கைகுலுக்கிச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். அதை ஒருவரும் புகைப்படம் எடுக்கவில்லையே என்ற ஆறாத வருத்தம் விஜயகாந்த்துக்கு உண்டு !

‘செந்தூரப் பாண்டி’யில் விஜய்யோடு நடித்து, ‘பெரியண்ணா படத்தில் சூர்யாவோடு நடித்து அவர்களை பி அண்ட் சி-க்கு கொண்டு சேர்த்த பெருமை விஜயகாந்த்க்கு உண்டு. இதை விஜய்யே ஒரு விழா வில் ஒப்புக்கொண்டு இருக்கிறார் !

விஜயாகாந்த்தின் மூத்த மகன் பிரபாகரன் இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிக்கிறார். இளையமகன் சண்முக பாண்டியன் +1 படிக்கிறார். இரண்டு பேருக்கும் சினிமாப் பக்கம் வரும் ஐடியாவே இல்லையாம். யாரிடமும் நாங்கள் விஜயகாந்த்தின் மகன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்பாமல் பழகுவார்கள் !

வீட்டில் செல்லமாக ராக்கி, சீசர், டேனி என்ற மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். விஜயகாந்த்தின் மீது அன்பைப் பொழியும் செல்லங்கள் !
(நான் பார்த்திருக்கிறேன்)
http://speedsays.blogspot.com/


செயின் ஸ்மோக்கராக இருந்த விஜயகாந்த், திருமணத்துக்கு பிறகு அந்தப் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார். அசைவப் பிரியரான அவர், இப்போது அயிரை மீன் குழம்பைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்கிறார்!

இதுவரை இரண்டே படங்களில் சிறு வேடங்களில் விஜயகாந்த்தாகவே வந்திருக்கிறார்.ஒன்று, ராமநாராயணன் அன்புக்காக ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, அடுத்து டைரக்டர் பாலா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ‘மாயாவி’ !

கமல்,ரஜினி போன்றவர்கள் விஜயகாந்த்தை ‘விஜி’ எனவும், நெருங்கிய நண்பர்கள் ‘பாஸ் எனவும்,கட்சி வட்டாரத்தில் ‘கேப்டன்’ எனவும் அழைக்கிறார்கள் !

திருநாவுக்கரசு, ஜெயலலிதா, ஆர்.எம்.வீ. கேட்டும் தராத எம்.ஜி.ஆரின் பிரசார வேனை விஜயகாந்த்துக்குக் கொடுத்திருக்கிறார் ஜானகி எம்.ஜி.ஆர் அதோடு, எம்.ஜி.ஆர். ஜானகி எம்.ஜி.ஆர். எனப் பெயர் பொறித்த மோதிரங்களையும் தம்பதியினருக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார் திருமதி ஜானகி !

முதலில் வாங்கிய டி.எம்.எம். 2 நம்பர் அம்பாஸடர் காரை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் விஜயாகாந்த். இன்றைக்கும் அதை ஆபீஸுக்கு எடுத்து வருவது உண்டு !

சினிமாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை அத்துமீறிவிட்டதால் விஜயகாந்த் எஸ்.எஸ்.எல்.சி – யைத் தாண்டவில்லை. ஆனால், வீட்டு வேலைக்காரர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் வரைக்கும் படிக்கவைக்க உதவி செய்கிறார் !

ஞாயிற்றுக்கிழமை கேப்டன் வீட்டில் 100பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலுகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும். வந்து செல்கிறவர்களை வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த் !

விஜயகாந்த்தின் குலதெய்வம் வீரசின்னம்மா. மதுரைக்குப் பக்கத்தில் திருமங்கலம் அருகில் இருக்கிறது. பாழடைந்து கிடந்த கோயிலை சுற்றுச்சுவர் எழுப்பி, கும்பாபிஷேகம் நடத்தி புதுபிக்க உதவியிருக்கிறார்!



இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் 17 படங்களும், ராமநாராயணன் டைரக்ஷனில் 17 படங்களும் நடித்திருக்கிறார் விஜயகாந்த். அவரோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் நளினி !

பாரதிராஜா தவிர்த்து பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்ததே இல்லை விஜயகாந்த் !







டிஸ்கி: மெயிலில் வந்தது தவறான செய்திகள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும்


எனக்கு பிடித்தது:http://speedsays.blogspot.com/

அரசியல் என்பது தற்போதுதான் ஆனால் அதற்கு முன்பே நலத்திட்டங்கள் உதவிகள் செய்தது

வீட்டிற்கு வரபவர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவு வழங்கும் பழக்கம்


எந்த விசயத்தையும் உண்மையாக மறைமுகம் இல்லாமல் பேசுவது

பிரபல நடிகர் என்ற பந்தா இல்லாதது

இலகுவாக இருக்கும் விதம்



உங்கள் கருத்துகளை பதிவின் கீழே தெரிவியுங்கள்.
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

Post Comment

You are

58 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

வடை வாங்கிட்டு படிக்க போறேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Add Reply

அறிய தகவல்கள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது...

இன்னும் தொடரட்டும்...

Anonymous said... Add Reply

// இப்போதும் ஃபுட்பால் வெறியர்//

அதுதான் எல்லாரையும் இந்த மிதி மிதிக்கறாரா..

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
வடை வாங்கிட்டு படிக்க போறேன்..

வாங்க வாங்க

Speed Master said... Add Reply

//
# கவிதை வீதி # சௌந்தர் said...
அறிய தகவல்கள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது...

இன்னும் தொடரட்டும்...


நன்றி

Speed Master said... Add Reply

// சிவகுமார் ! said...
// இப்போதும் ஃபுட்பால் வெறியர்//

அதுதான் எல்லாரையும் இந்த மிதி மிதிக்கறாரா..

பிரச்சனைய கிளப்பாம இருக்கமாட்டிங்க

சி.பி.செந்தில்குமார் said... Add Reply

>>>>தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

இந்த லைன்ஸ் இனி தேவை இல்லை.. 78% வாக்குப்பதிவு காட்டி நிரூபிச்ட்டாங்களே?

Speed Master said... Add Reply

// சி.பி.செந்தில்குமார் said...
>>>>தேர்தலில் தான் வாக்களிக்கும் பழக்கம் இல்லை இங்காவது வாக்களியுங்கள்

இந்த லைன்ஸ் இனி தேவை இல்லை.. 78% வாக்குப்பதிவு காட்டி நிரூபிச்ட்டாங்களே?



இன்னும் 22% மக்கள் ஓட்டளிக்க வில்லை

(ஒரு ஃபுளோவுக்கு போட்டா விடமாட்டிங்களே)

சசிகுமார் said... Add Reply

அறிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

Anonymous said... Add Reply

பரவாயில்லையே பின்னி எடுத்திட்டீங்க நிரைய தகவல்கள் பலருக்கும் உபயோகமாக இருக்கும்..

Speed Master said... Add Reply

// சசிகுமார் said...
அறிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.


நன்றி சசி

Speed Master said... Add Reply

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
பரவாயில்லையே பின்னி எடுத்திட்டீங்க நிரைய தகவல்கள் பலருக்கும் உபயோகமாக இருக்கும்..

மிக்க நன்றி

சக்தி கல்வி மையம் said... Add Reply

அசத்தல் பதிவு..

Speed Master said... Add Reply

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அசத்தல் பதிவு..


நன்றி சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said... Add Reply

சுவராசியமான தகவல்கள், எழுதியவருக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்!

Speed Master said... Add Reply

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சுவராசியமான தகவல்கள், எழுதியவருக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்!

நன்றி சார்

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

அரசியல்னு வந்தாச்சின்னா சில பல வசவுகளை அனுசரித்துதான் ஆகணும், புலன்விசாரணை பட சூட்டிங் மும்பையில் நடந்த போது ரசிகர்'களிடம் மிகவும் எளிமையாக பழகினார். நானும் கைகொடுத்து விட்டு வந்தேன்....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

//ஆனால், வீட்டு வேலைக்காரர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் வரைக்கும் படிக்கவைக்க உதவி செய்கிறார் !//

பாராட்டவேண்டிய விஷயம் அல்லவா இது....

MANO நாஞ்சில் மனோ said... Add Reply

நல்ல பதிவு மக்கா இது சூப்பர் வாழ்த்துகள்....

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
அரசியல்னு வந்தாச்சின்னா சில பல வசவுகளை அனுசரித்துதான் ஆகணும், புலன்விசாரணை பட சூட்டிங் மும்பையில் நடந்த போது ரசிகர்'களிடம் மிகவும் எளிமையாக பழகினார். நானும் கைகொடுத்து விட்டு வந்தேன்....

நானும் வீட்டுக்கே போய் பாத்துருக்கேன்

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
//ஆனால், வீட்டு வேலைக்காரர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் வரைக்கும் படிக்கவைக்க உதவி செய்கிறார் !//

பாராட்டவேண்டிய விஷயம் அல்லவா இது....

நிச்சயம்

Speed Master said... Add Reply

// MANO நாஞ்சில் மனோ said...
நல்ல பதிவு மக்கா இது சூப்பர் வாழ்த்துகள்....

நன்றி

ரஹீம் கஸ்ஸாலி said... Add Reply

இதுவரை விஜயகாந்த் 152 படங்களில் நடித்திருக்கிறார். 153 – வது படம் அவரது டைரக்ஷனில் வருகிறது. இவ்வளவு நாள் ஃபில்டில் இருந்ததற்கு ஒரு படம் டைரக்ட் செய்தாக வேண்டும் என்பது அவரது விருப்பம் !///
கொஞ்சம் பழைய செய்தியாக இருக்கே....அதான் விருதகிரி வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடி தேசிய விருது வாங்கிருச்சே?

Speed Master said... Add Reply

//
ரஹீம் கஸாலி said...
இதுவரை விஜயகாந்த் 152

நான் அவரது விருப்பத்தை தான் கூறியுள்ளேன்

அஞ்சா சிங்கம் said... Add Reply

நடத்துங்க நடத்துங்க உங்களுக்கு பதவி கண்பார்மு ............

செய்தாலி said... Add Reply

சாலி கிராமத்தில் உள்ள கண்ணபிரான் தெருவில் இருந்து
பார்த்ததை போல் எல்லா உண்மையும் கக்கிவிடீர்கள்

எந்த நடிகர்களை பற்றி பேசும்போது அந்த நடிகனின் நடிப்பை பற்றி அதிகம் பேசுவோம்
விஜயக்காந்தை பற்றி பேசும்போது முதலில் பேசுவது அவரின் ஈகை குணத்தை
செய்யும் உதவியை விளம்பரபடுத்தும் மனிதர்களுக்கு இடையில் இவர் ஒரு விதி விலக்கு

1998 முதல் 2005 வரை நான் கேட்ட பார்த்த விஷயம் இது

நல்ல பதிவு தோழரே

Speed Master said... Add Reply

// அஞ்சா சிங்கம் said...
நடத்துங்க நடத்துங்க உங்களுக்கு பதவி கண்பார்மு ............


குடுங்கப்பா ஒரு வேலையும் இல்ல

Speed Master said... Add Reply

//செய்தாலி said...
சாலி கிராமத்தில் உள்ள கண்ணபிரான் தெருவில் இருந்து
பார்த்ததை போல் எல்லா உண்மையும் கக்கிவிடீர்கள்

எந்த நடிகர்களை பற்றி பேசும்போது அந்த நடிகனின் நடிப்பை பற்றி அதிகம் பேசுவோம்
விஜயக்காந்தை பற்றி பேசும்போது முதலில் பேசுவது அவரின் ஈகை குணத்தை
செய்யும் உதவியை விளம்பரபடுத்தும் மனிதர்களுக்கு இடையில் இவர் ஒரு விதி விலக்கு

1998 முதல் 2005 வரை நான் கேட்ட பார்த்த விஷயம் இது

நல்ல பதிவு தோழரே




நன்றி நண்பரே தொடர்ந்து வருகைதாருஙகள்

Speed Master said... Add Reply

//செய்தாலி said...
சாலி கிராமத்தில் உள்ள கண்ணபிரான் தெருவில் இருந்து
பார்த்ததை போல் எல்லா உண்மையும் கக்கிவிடீர்கள்

எந்த நடிகர்களை பற்றி பேசும்போது அந்த நடிகனின் நடிப்பை பற்றி அதிகம் பேசுவோம்
விஜயக்காந்தை பற்றி பேசும்போது முதலில் பேசுவது அவரின் ஈகை குணத்தை
செய்யும் உதவியை விளம்பரபடுத்தும் மனிதர்களுக்கு இடையில் இவர் ஒரு விதி விலக்கு

1998 முதல் 2005 வரை நான் கேட்ட பார்த்த விஷயம் இது

நல்ல பதிவு தோழரே


நன்றி

Unknown said... Add Reply

நல்ல பல தகவல்களுக்கு நன்றி மாப்ள!

Speed Master said... Add Reply

//விக்கி உலகம் said...
நல்ல பல தகவல்களுக்கு நன்றி மாப்ள!

நன்றி

Unknown said... Add Reply

விஜயகாந்த் பற்றிய விலாவாரியான தகவல்கள்.
புகைப்படங்களும் அருமை.

Unknown said... Add Reply

// இப்போதும் ஃபுட்பால் வெறியர்//

அதுதான் எல்லாரையும் இந்த மிதி மிதிக்கறாரா..

ha..ha..ha/..

Speed Master said... Add Reply

//பாரத்... பாரதி... said...
விஜயகாந்த் பற்றிய விலாவாரியான தகவல்கள்.
புகைப்படங்களும் அருமை.

நன்றி பாரதி

Speed Master said... Add Reply

//FOOD said...
பகிர்ந்த விதம் அருமை, நண்பரே!


நன்றி சார்

Speed Master said... Add Reply

//
பாரத்... பாரதி... said...
// இப்போதும் ஃபுட்பால் வெறியர்//

அதுதான் எல்லாரையும் இந்த மிதி மிதிக்கறாரா..

ha..ha..ha/..

சும்மா இருக்கமாட்டிங்களா?

rajapothysraja said... Add Reply

ennaku veru entha nadigariyum vida vijayakanth mela oru patru vara avarathu eegai kuname, ovoru piranthal naal pothum avar seyyum uthavikal ondre pothum avar oru kodai vallal endru

Speed Master said... Add Reply

//
rajapothys said...

வருகைக்கு நன்றி ராஜா தொடர்ந்து வருகை தாருங்கள்

rajamelaiyur said... Add Reply

Very interesting

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said... Add Reply
This comment has been removed by the author.
ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said... Add Reply

திருமதி.விஜயகாந்த் ஒரு சிறந்த வளைப்பந்து (Tennikoit) வீராங்கனை என்பது தெரியுமா?

Jayadev Das said... Add Reply

\\153 – வது படம் அவரது டைரக்ஷனில் வருகிறது. இவ்வளவு நாள் ஃபில்டில் இருந்ததற்கு ஒரு படம் டைரக்ட் செய்தாக வேண்டும் என்பது அவரது விருப்பம் !\\ விருத்தகிரி அவரு டைரக்ஷன் தானே, 153 – வது படம் அதுதானா? அதான் வந்துடுச்சுல்ல!! [பழைய செய்தியை கொஞ்சம் அப்டேட் பண்ணி போடலாமே! ஹா...ஹா..ஹா...]]

Jayadev Das said... Add Reply

\\நடிகர் ராஜேஷின் தம்பி திருமணத்தில்தான் எம்.ஜி.ஆரோடு கைகுலுக்கிச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். அதை ஒருவரும் புகைப்படம் எடுக்கவில்லையே என்ற ஆறாத வருத்தம் விஜயகாந்த்துக்கு உண்டு !\\ அப்படி ஒரு போட்டோ மட்டும் கிடைச்சிருந்தா, இன்னைக்கு அதை தமிழ்நாடு பூராவும் போட்டு, இதோ பாருங்க, கருப்பு எம்.ஜி.ஆரும் வெள்ளை எம்.ஜி.ஆரும் ஒண்ணா நிற்கிறாங்கன்னு சொல்லி தம்பட்டம் அடிச்சிருப்பாங்க, நல்ல வேலை தப்பிச்சாரு எம்.ஜி.ஆர். [அது சரி, தன்னை எம்.ஜி.ஆரோடு ஒப்பிடும் இவர், எதுக்கு கருணாநிதியின் தலைமையில் கலயாணத்தைப் பண்ணினாரு? # டவுட்டு..ஹி..ஹி..ஹி..]

Jayadev Das said... Add Reply

\\இரண்டு பேருக்கும் சினிமாப் பக்கம் வரும் ஐடியாவே இல்லையாம்.\\ நேரா வாரிசு அரசியல் தானா?

Jayadev Das said... Add Reply

\\செயின் ஸ்மோக்கராக இருந்த விஜயகாந்த், திருமணத்துக்கு பிறகு அந்தப் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார்.\\ அந்தப் பழக்கமுமா!!

Oceanhooks said... Add Reply

Thank you for this excellent info brother. More interesting news on Captain here: http://goo.gl/8Gzjd

Jayadev Das said... Add Reply

\\ திருநாவுக்கரசு, ஜெயலலிதா, ஆர்.எம்.வீ. கேட்டும் தராத எம்.ஜி.ஆரின் பிரசார வேனை விஜயகாந்த்துக்குக் கொடுத்திருக்கிறார் ஜானகி எம்.ஜி.ஆர் அதோடு, எம்.ஜி.ஆர். ஜானகி எம்.ஜி.ஆர். எனப் பெயர் பொறித்த மோதிரங்களையும் தம்பதியினருக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார் திருமதி ஜானகி !\\ இவரு கட்சி ஆரம்பிச்ச போது, அந்தம்மா இருந்தாங்களா....???

Jayadev Das said... Add Reply

\\ஆனால், வீட்டு வேலைக்காரர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் வரைக்கும் படிக்கவைக்க உதவி செய்கிறார் !\\ தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு ஒண்ணுமே செய்ய வில்லை, அந்தப் பக்கமே தலை வச்சு கூட படுப்பதில்லைன்னு விருத்தாசலம் மக்கள் புலம்புறாங்களே ராசா!!!இந்த அப்ரோச்சை கொஞ்சம் அங்கேயும் காட்டியிருக்கலாமே.?

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said... Add Reply

திருமதி ஜானகி ராமச்சந்திரன் இறந்தது 1996 இல்!

Jayadev Das said... Add Reply

\\ஞாயிற்றுக்கிழமை கேப்டன் வீட்டில் 100பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலுகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும். வந்து செல்கிறவர்களை வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த் !\\ Like MGR used to do!!

Jayadev Das said... Add Reply

\\விஜயகாந்த்தின் குலதெய்வம் வீரசின்னம்மா. மதுரைக்குப் பக்கத்தில் திருமங்கலம் அருகில் இருக்கிறது. \\ கோவில் அங்கே இருக்கேன்னு சொல்லி அந்த பார்முலாவை தேர்தல்களில் பின்பற்றிடாதீங்க ராசா...

Jayadev Das said... Add Reply

இவருடன் உள்ள மைனஸ்கள்:

கட்சியில் பெண்டாட்டி, பிள்ளைகள், மைத்துனன் எல்லோரையும் கொண்டாந்து விட்டு, இப்போதே குடும்ப அரசியலை ஆரம்பித்து விட்டது.
குடிகாரன் என்ற குற்றச் சாட்டை மறுக்க முடியாமல் தவிப்பது.
கட்சி வேட்பாளர் பெயரைக் கூட ஞாபகத்தில் வைக்கத் தெரியாமல் திணறுவது, தி.மு.க, அ.தி.மு.கா வுக்கு கூட வித்தியாசம் தெரியாமல் உளறுவது.

தன்னைத் தேர்ந்தெடுத்த விருத்தாசலம் தொகுதிக்காக ஒன்னும் செய்யாதது. [சேவை செய்ய கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி, இவர் நாட்டுக்கு உழைக்கத் தயார் என்று தன்னை நிரூபிக்கத் தவறி விட்டார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், இவர் ஆட்சிக்கே வந்தாலும், இதே லட்சணம்தான் நீடிக்கும் என்று எண்ண இடம் கொடுத்து விட்டார்]

Jayadev Das said... Add Reply

@ M.S.E.R.K.

When did this fellow float his party?

Jayadev Das said... Add Reply

Political career

He formed the center-left winged Desiya Murpokku Dravida Kazhagam (DMDK), a regional political party in Tamil Nadu. He formally announced the party's formation on 14 September 2005 in Madurai. His party contested in all seats in 2006 assembly elections and won one seat contested by him. In 2011 election to be contested by April 13, 2011 he has formed an alliance with AIADMK and is contesting in 41 constituencies. Even though he has no quality to be a politician, he harbours great ambitions.
[edit]

Jayadev Das said... Add Reply

விஜய காந்த் 2005-ல கட்சி ஆரம்பிக்கப் போறாருன்னு முன்னாடியே தெரிஞ்சு, எம்ஜிஆரோட பிரசார வேனை 1996-க்கு முன்னாடியே குடுத்துட்டு மண்டையைப் போட்டுட்டாங்களா!!

செங்கோவி said... Add Reply

அந்த வேனால் வந்த வீணான ஆசையால் தான் நாம இப்போ அவஸ்தைப் படறோம் பாஸ்!

Speed Master said... Add Reply

வந்து வாக்களித்து கருத்துகளை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி

தொடர்ந்து வருகைதாருங்கள்

ADMIN said... Add Reply

பகிர்வுக்கு மிக்க நன்றி.. பல செய்திகளை தெரிந்துகொள்ள முடிந்தது...